ஆட்டோ தொழிலாளர் குடும்ப பாதுகாப்பு நிதி
திருவள்ளூர், செப்.13- திருவள்ளூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் (சிஐ டியு), சார்பில் குடும்ப பாதுகாப்பு திட்ட நிதி வழங்கப்பட்டது. கும்மிடிபூண்டி பகுதி பைபாஸ் ஆட்டோ கிளைத் தலைவர் தோழர் பி.முனு சாமி அண்மையில் இயற்கை மரணம் அடைந்தார். அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோரிடம் ஆட்டோ சங்கத்தின் சார்பில் ரூ.10 ஆயிரத்தை வியாழனன்று வழங்கப்பட்டது. ஆட்டோ சங்கத்தின் மாவட்டச் செய லாளர் எம்.சந்திரசேகரன் தலைமையில் மாவட்ட துணை பொதுச் செயலாளர் ஜே.ஆனந்தன் மாவட்டத் துணை தலைவர்கள் எஸ்.பரமசிவன், எம்.ரவிச்சந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் சரவணன், பைபாஸ் கிளை நிர்வாகிகள் ஏ.ஆர்.அமானுல்லா, லோகநாதன் புவனேஷ் ஆகியோர் உடனுள்ளனர்.