tamilnadu

img

பட்டியலின விவசாயின் பட்டா நிலத்தை அபகரிக்க முயற்சி: அதிகாரிகள் உடந்தை

பட்டியலின விவசாயின் பட்டா நிலத்தை அபகரிக்க முயற்சி: அதிகாரிகள் உடந்தை

கிருஷ்ணகிரி, ஆக. 23- கிருஷ்ணகிரி மாவட்டம், சோம நாதபுரம் அருகில் உள்ள ரங்கா பண்டித அக்ரஹாரம் கிராமத்தில் பட்டியலின விவசாயி ரவி யின் நிலத்தை ஆக்கிரமிக்க  நிலத்தரகர் உள்ளிட்ட சிலர் முயற்சித்து வரு கின்றனர். மூன்று தலைமுறைகளுக்கு முன்பிருந்தே அவரது குடும்பம் சர்வே எண் 56/1ல் 1.45 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வரு கிறது. தமிழ்நாடு அரசு, 8 பட்டிய லின குடும்பங்களுக்கு இனாம் நிலமாக வழங்கிய நிலத்தில் ரவி யின் பாட்டி முனியம்மாவுக்கும் ரயத்துவாரி இனாம் மூலம் நிலம் வழங்கப்பட்டது.  வாரிசு பட்டா மூலம் மகள் நாராயணம்மாவுக்கும், அவரை திரு மணம் செய்த ரவிக்கும் பட்டா மூலம்  வழங்கப்பட்டுள்ளது. மூன்று தலைமுறைகளுக்கு மேலாக இந்த நிலத்தில் விவசாயம் செய்து இதில் வரும் வருமானத்தை வைத்து மூன்று பெண் குழந்தைகளுடன் குடும்பம் நடத்தி வருகிறார். கடந்த ஓராண்டாக, நிலத்தரகர் கண்ணன் என்பவர் தங்களது குடும்பத்தினர் நிலத்தையும் சேர்த்து ஆக்கிரமிக்க முயற்சித்து வருவ தாக ரவி கூறுகிறார். முறை கேடாக கிராம நிர்வாக அலு வலர், வட்டாட்சியர், நில அளவை யர் மூலம் பட்டாக்கள் பெற்று விஜய குமார், கண்ணன் ஆகியோர் அடியாட்களை வைத்து ஆக்கிர மித்து வருகின்றனர். இவ்வாறு ஆக்கிரமிக்கும் போது அதை தடுக்கும் போதெல்லாம் கொலை செய்து விடுவதாக மிரட்டுகின்றனர். நீதிமன்ற வழக்கு,புகார் முறைகேடான பட்டா ஆக்கிர மிப்பு குறித்து கிருஷ்ணகிரி நீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. மல்லம்மா, முரளி ஆகியோரின் நிலமும் ஆக்கிரமிக்கப்  பட்டு வழக்கு நடந்து வருகிறது.  கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி ஓசூர் சாராட்சியர் இந்த நிலத்திற்கு ரவியின் பெயருக்கு பட்டா கொடுத்துள்ளார். கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர் எதிர்மனு தாரர் நிலத்தரகர் கண்ணணுக்கு முறைகேடாக சான்று அளித்து நீதிமன்றத்தின் ஆணைக்கு புறம்பாக பட்டா கொடுத்துள்ளனர்.  இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி நிலத்தரகர்கள் விஜயகுமார், மாதையா, குமர வேல், கண்ணன் உள்ளிட்டோர் அடியாட்களுடன் வந்து ரவி நிலத்தில் உள்ள பாறைகளை பெயர்த்தும் மண்ணை அள்ளியும் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டனர்.  விவசாயத்தை சேதப்படுத்தி ரோஜாப்பூ, வெள்ளரிக்காய், அவரை, தேங்காய் செடிகளை சேதப்படுத்தி மண்ணைக் கொட்டினர்.  இந்த நிலையில், ரவியும் அவரது குடும்பத்தினரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டச் செயலாளர் முனிராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் ஆனந்தகுமார், சிபிஎம் ஓசூர் ஒன்றியச் செயலாளர் தேவராஜ் ஆகியோரிடம் முறை யிட்டனர். ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்ட இடத்தையும், முறைகேடாக வேலைகள் நடப்பதையும் விவசாயிகள் சங்க வட்டச் செயலாளர் முனிராஜ், மாவட்டப் பொருளாளர் எம் எம் ராஜு, வட்ட துணைத் தலைவர்கள் திம்மா ரெட்டி, ஜெயராமன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் ஆனந்தகுமார் ஆகியோர் பார்வையிட்டனர். இதைத் தொடர்ந்து, விவ சாயிகள் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சிபிஎம் ஓசூர் ஒன்றியக் குழு சார்பில் ஓசூர் நகர காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. ரவியின் நிலத்தில் ஆக்கிரமிப்பில் ஈடுபடும் கண்ணன் மற்றும் அவருடன் சேர்ந்து கொலை வெறித் தாக்குதல் நடத்த வந்த அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.