tamilnadu

img

கிர்கிஸ்தான் தலைநகரில் வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்

கிர்கிஸ்தான் தலை நகர் பிஷ்கெக்கில் வெளிநாட்டு  மாண வர்களை தேடித் தேடி கிர் கிஸ்தான் மாணவர்கள் தாக்கும் வன்முறை  வெடித் துள்ளது.   மே 13 அன்று வெளிநாட்டு மாணவர்கள் சிலருடன் கிர் கிஸ்தான் மாணவர்களுக்கு மோதல் ஏற்பட்டதாக ஒரு காணொலி மே 17 அன்று சமூக வலைத்தளங்களில் பரவத் துவங்கியது. இத னைத் தொடர்ந்து கிர்கிஸ் தான் மாணவர்கள் அந்நாட்டு தலைநகரில் மருத்துவம் படிக்க வந்துள்ள மாண வர்கள் உட்பட பல வெளி நாட்டு மாணவர்களை தேடித் தேடி தாக்க துவங்கினர். இதனால் அந்நாட்டு தலைநகரில் வன்முறை உருவாகியுள்ளது.  இந்த வன்முறையைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அனைத்து நாடுகளும் தங்கள் மாணவர்களை பாது காக்கும் பொருட்டு உதவி எண்களை வெளியிட்டுள் ளன. இந்திய தூதரகமும் 0555710041 என்ற எண்ணை வெளியிட்டுள்ளது.  மேலும் இந்திய மாணவர்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என  அறிவுறுத்தியுள்ளது. இந்திய மாணவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், தற்போது  நிலைமை அமைதியை நோக்கி திரும்பியுள்ளதா கவும்  இந்திய தூதரகமும் தெரிவித்துள்ளது.  இந்திய மாணவர்களின் நலனை தொடர்ந்து கண் காணித்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய் சங்கர் தெரிவித்துள்ளார்.   இந்த கலவரத்தில் பாகிஸ்தான் மாணவர்கள் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டதாக ஒரு செய்தி வெளியான நிலை யில் அது கிர்கிஸ்தான் தலை நகரில்  பதட்டத்தை மேலும் அதிகரித்தது. அந்நிலையில் கிர்கிஸ்தானில் உள்ள  பாகிஸ்தான் தூதரகம் பாகிஸ்தான் மாணவர்கள் யாரும் இந்த கலவரத்தில் உயிரிழக்கவில்லை என உறுதிப்படுத்தியுள்ளது.