அரையபட்டி அருவுகம் அம்மாள் காலமானார்;
அறந்தாங்கி, ஜூலை 19 - புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் அரையபட்டியைச் சேர்ந்த சு.அருவுகம் அம்மாள் (80) வெள்ளிக்கிழமை காலமானார். இவர் காலஞ்சென்ற சுப்பையாவின் மனைவியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினரும், தீக்கதிர் நாளிதழ் மாவட்ட செய்தியாளரும், புதுக்கோட்டை பத்திரிகையாளர் சங்க மாவட்டத் தலைவரு மான சு.மதியழகனின் தாயாரும் ஆவார். அருவுகம் அம்மாள் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ. வாசுகி, மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ.மெய்யநாதன், கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர்கள் என்.பாண்டி, மதுக்கூர் இராமலிங்கம், எஸ்.கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.வி.நாகராஜன், எம்.சின்னத் துரை எம்எல்ஏ, தீக்கதிர் ஆசிரியர் எஸ்.பி.ராஜேந் திரன் மற்றும் முன்னாள் அமைச்சரும் காங்கி ரஸ் மூத்த தலைவருமாகிய சு.திருநாவுக்கரசு, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன் ஆகியோர் இரங்கல் தெரி வித்தனர். சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், சிபிஐ மாவட்டச் செயலாளர் செங்கோடன், சிபிஎம் மாவட்ட செயற்குழு - மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள், சிஐடியு, விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழி லாளர்கள் சங்கம், மாதர், மாணவர், வாலிபர் சங்க தலைவர்கள், தோழர்கள் மறைந்த அரு வுகம் அம்மாள் உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். தீக்கதிர் திருச்சி பதிப்பு மேலாளர் ஜெயபால், புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஜெயபிரகாஷ், பொரு ளாளர் சுரேஷ், புதுக்கோட்டை தினமணி விளம்பர பிரிவு மேலாளர் ஜெயச்சந்திரன், தினமணி சிவகங்கை மாவட்ட செய்தியாளர் மோகன்ராம், நக்கீரன் செய்தியாளர் பகத் சிங் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அரையபட்டியில் அன்னாரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.