சென்னை, ஆக. 1- தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞரின் 5 ஆவது ஆண்டு நினைவு தினம் ஆகஸ்ட் 7 அன்று அனுசரிக்கப் பட உள்ளது. அன்றைய தினம் தமிழ்நாடு முதல்வரும், திமுக தலை வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் (ஆக. 7) காலை 8 மணிக்கு அமைதிப் பேரணி நடைபெறுகிறது. சென்னை, அண்ணா சாலை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலை அருகில் இருந்து புறப் பட்டு, காமராஜர் சாலையில் அமைந் துள்ள கலைஞர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்து கிறார். பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் முதன் மைச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொள்கிறார்கள்.