சென்னை, ஜூன் 23- இருளர் இனப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மக்கள் கண்காணிப்பகம் ஆகிய அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. இதுகுறித்து இந்த அமைப்புகளின் சார்பில் வெள்ளியன்று (ஜூன் 23) சென்னையில் உள்ள தமிழ் நாடு காவல்துறை தலைவர் (டிஜிபி) அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதில் மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநில பொதுச் செயலாளர் அ.ராதிகா, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைக ளுக்கான சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பாரதி அண்ணா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி செங் கல்பட்டு மாவட்டச் செய லாளர் ஜி.புருஷோத்தமன், மக்கள் கண்காணிப்பகம் ஒருங்கிணைப்பாளர்
ஆசிப், நிர்வாகி மேத்யூ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காட்டங்குளத்தூர் பகுதிச் செயலாளர் குண சேகரன், மாதர் சங்க மாவட்டத் தலைவர் கலை யரசி, மாவட்ட நிர்வாகிகள் தமிழரசி, அனுசியா உள்ளிட்ட பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த வர்கள் கலந்து கொண்ட னர். இதுகுறித்து எஸ்.வாலண்டினா செய்தி யாளர்களிடம் கூறியதாவது; திருப்போரூர் அடுத்த தையூர் பாலம்மாள் நகர் படூர் பாலு என்பவர் கடந்த 2021ஆம் ஆண்டு பல்வேறு கிராமங்களை சேர்ந்த பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த 10 பெண்கள், 10 ஆண்கள் என 20 பேரை மரம் வெட்டும் வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஒரு நபருக்கு தினசரி கூலி ரூ. 100 கொடுத்து காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை வேலை வாங்கியுள்ளார். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்கவில்லை. மேலும் சில பெண்களி டம் பாலு தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். அங்கு வேலை பார்த்த அனைத்து பெண்களையும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியுள்ளார். இதை தட்டிக் கேட்டவர்களை வேலையை விட்டு அனுப்பி விடுவேன் என்றும், கூலி வழங்க மாட்டேன் எனவும் மிரட்டியுள்ளார்.
மீனா(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற பெண்ணை வலுக் கட்டாயமாக பாலியல் வல்லு றவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் உற வினர்கள் மூலம் செங்கல்பட்டு கோட்டாட்சி யருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் கடந்த ஏப்ரல் மாதம் கொத்தடிமைகளாக இருந்த 20 பேரும் மீட்கப்பட்ட னர். ஆனால் காவல் துறையி னர் பாதிக்கப்பட்ட பெண்க ளிடம் பாலியல் வன்கொ டுமை குறித்து விசாரணை நடத்தவில்லை. இதனால் பாலு பாதிக்கப்பட்ட பெண் களையும், அவர்களது குடும்பத்தினரையும் வழக்கை திரும்பப் பெறக் கோரி மிரட்டியுள்ளார். மேலும் கடந்த 3ஆம் தேதி புகார் கொடுத்த பெண் ணையும் தாக்கியுள்ளார். இதுகுறித்து கேளம் பாக்கம் காவல் நிலையத் தில் புகார் அளிக்கப்பட்டது. மாதர் சங்கம் சார்பில் மாவட்ட காவல் கண் காணிப்பாளரிடம் நட வடிக்கை எடுக்கக் கோரி வலியுறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து பாலு மீது எஸ்சி,எஸ்டி வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை. எனவே அவரை உடனடி யாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட வர்களுக்கு உரிய பாது காப்பு வழங்க வேண்டும், உயர்மட்ட விசாரணை குழு அமைத்து துரிதமாக விசாரணை மேற்கொண்டு அனைத்து குற்றவாளி களையும் முழுமையாக அடையாளம் காண வேண்டும். செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களை கொத்தடிமைகளாக பயன் படுத்துவது குறித்து தமிழ் நாடு அரசு முழுமையாக விசாரணை மேற்கொள்ள வேண்டும், கொத்தடிமை முறையை முழுமையாக களைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐஜி (சட்டம்- ஒழுங்கு) உமாவை சந்தித்து வலியுறுத்தினோம். மனுவை பெற்றுக் கொண்ட அவர் தாம்பரம் காவல் ஆணையருக்கு பரிந்துரைப் பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.