வாச்சாத்தி வழக்கின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த வழக்கறிஞர்கள் மற்றும் போராளிகளுக்கு வெள்ளியன்று (அக்.21) சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சென்னை மாவட்டக்குழு இந்த நிகழ்வை நடத்தியது. வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர்.பிரசாத், ஆர்.வைகை, கே.இளங்கோ, ஜி.சம்கிராஜ், கே.சுப்புராம், மலைவாழ் மக்கள் சங்க தலைவர்கள் பெ.சண்முகம், பி.டில்லிபாபு ஆகியோரை இடதுசாரி இயக்கத்தின் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் கவுரவித்து பாராட்டினார். சங்கத்தின் சென்னை மாவட்டத் தலைவர் பி.பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், தமுஎகச துணைத் தலைவர் திரைக்கலைஞர் ரோகிணி, சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.கோதண்டம், பொதுச் செயலாளர் எஸ்.சிவக்குமார், மேனாள் புரவலர் சிகரம் ச.செந்தில்நாதன், மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஷினு ஆகியோர் பேசினர்.