பஞ்சமி நிலங்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு கோரிக்கை
கரூர், ஜூலை 21- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கரூர் மாவட்ட 5 ஆவது மாநாடு சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினர் வக்கீல் பி.சரவணன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் கே.வி. கணேசன் வரவேற்றுப் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம். ஜெயசீலன் மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார். மாவட்டச் செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி வேலை அறிக்கையை முன் வைத்துப் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மா. ஜோதிபாசு மாநாட்டை வாழ்த்தி பேசினார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவராக கெ.சக்திவேல், மாவட்டச் செயலாளராக இரா.முத்துச்செல்வன், பொருளாளராக எஸ்.கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர்களாக வக்கீல் பி.சரவணன், எஸ்.சிவக்குமார், எஸ்.கணேசன், துணைச் செயலாளராக மு.சுப்பிரமணியன், வி.கணேசன், கே.சுப்பிரமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளர் செ. முத்துராணி நிறைவுரையாற்றினார். கரூர் மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை கையகப்படுத்தி உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறுவேற்றப்பட்டன. மாவட்டச் செயலாளர் இரா. முத்துசெல்வன் நன்றி கூறினார்.