tamilnadu

img

குமரன் குடி ஊராட்சியில் 317 கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பு ஊசி முகாம்

குமரன் குடி ஊராட்சியில் 317 கால்நடைகளுக்கு  கோமாரி தடுப்பு ஊசி முகாம் 

எம்எல்ஏ அன்பழகன் துவக்கி வைத்தார்

கும்பகோணம், ஜூலை 3-  கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி, குமரங்குடி ஊராட்சியில் சிறப்பு கால்நடைகளுக்கான ஏழாவது சுற்று கோமாரி தடுப்பூசி கால்நடை மருத்துவ சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமை, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து முகாமை தொடங்கி வைத்தார். கன்றுகளை நன்கு பராமரித்த மூன்று விவசாயிகள் மற்றும் முன்னோடி விவசாயிகள் 3 பேருக்கு பரிசு வழங்கினார். மாடு மற்றும் ஆடு மலடு நீக்க சிகிச்சை பெட்டகம் 20 பேருக்கு வழங்கினார். மேலும்  கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்களால் 317 கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போடப்பட்டது இந்நிகழ்வில், உள்ளாட்சி முன்னாள் பிரதிநிதிகள், கால்நடை  பராமரிப்புத்துறை கும்பகோணம் கோட்ட உதவி இயக்குனர் பாஸ்கர், உதவி இயக்குனர் ரமேஷ், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மதிவாணன், செல்வராஜ், விஜயா  கால்நடை ஆய்வாளர்கள் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.