tamilnadu

img

பாஜக அரசு நிறுத்திய கல்வி உதவித்தொகையை இனி தமிழக அரசே வழங்கும்: மு.க.ஸ்டாலின்

சென்னை,பிப்.17- ஒன்று முதல் 8ம் வகுப்பு  வரை பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு ஒன்றிய அரசு நிறுத்திய கல்வி  உதவித் தொகையை இனி தமிழ்நாடு அரசு வக்ஃப் வாரியம்  மூலம் வழங்கும் என்று முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித் துள்ளார். சென்னை தலைமைச் செய லகத்தில் சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை (பிப்.17)   நடைபெற்றது. சிறுபான்மை யினர் நலன் குறித்த பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் வெளி யிட்டார். அவை வருமாறு: சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு வாழ்நாள் அங்கீகாரம் மாநில அரசால் வழங்கப்படும். மதச்சார்பு சிறுபான்மையினர் (Religious Minority) அந்தஸ்து சான்றிதழ், காலம் குறிப்பிடப்படாமல், நிரந்தர சான்றிதழாக வழங்க அரசாணை 02.02.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது. அரசு  நிதியுதவி பெறும் சிறுபான்மை யினர் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவிகள் புதுமைப் பெண் திட்டத்தில் சேர்த்தல் குறித்த ஆணைகள் விரைவில் வெளியிடப்படும்.  கிராமப்புறங்களில் உள்ள அரசு நிதியுதவி பெறும் சிறு பான்மையினர் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயி லும் மாணவர்களுக்கும் காலைச்  சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் குறித்த ஆணைகள் விரைவில்  வெளியிடப்படும். 20 ஆண்டு களுக்கு மேலாக வாழ்நாள் சிறை தண்டனை அனுபவித்து வரும் முஸ்லிம் சிறைவாசிகளில் மேலும் 11 பேரை விடுதலை செய்யும் கோப்புகள் ஆளு நரின் ஒப்புதலுக்காக பரிந்துரைக் கப்பட்டுள்ளது.   பள்ளிக் கல்வித் துறையில், அரசு தொடக்க, நடுநிலை, உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அனைத்து வகை யான ஆசிரியர்கள் நேரடி  நியமனத்திற்கான உச்ச வயது  வரம்பினை பொதுப்பிரி வினருக்கு 53 எனவும், இதரப்  பிரிவினருக்கு 58 எனவும் நிர்ண யித்து ஆணை வழங்கப்பட்டுள் ளது.

இந்த உச்ச வயது வரம்பு  அரசு நிதியுதவி பெறும் சிறு பான்மையினர் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த ஆணை பிறப்பிக் கப்பட்டுள்ளது. சமுதாயத்தின் அடித்தளத்  தில் உள்ள ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற் படுத்தப்பட்ட, மற்றும் சீர்மரபி னர் சமூகத்தை சேர்ந்த  மக்கள் இஸ்லாத்தை தழுவி னால் அவர்களுக்கு பிற்படுத் தப்பட்ட முஸ்லிம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கைக்கு விரைவில் தீர்வு காணப்படும்.  தமிழ்நாடு சிறுபான்மையி னர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், கூட்டுறவு வங்கிகள் மூலம் சிறுபான்மையின மாண வர்களுக்கு வழங்கப்படும் கல்விக் கடன்கள், இனிமேல் ரூபாய் 5 லட்சம் வரை வழங்கப்படும்.   சிறுபான்மையின மக்க ளுக்கு வழங்கிவந்த கல்வி உதவித் தொகையினை (Pre-Matric Scholarship) ஒன்றிய அரசு 2022-2023ம் ஆண்டு முதல்  1 முதல் 8ஆம் வகுப்பு பயிலும்  சிறுபான்மையின மாணவ,  மாணவியருக்கு நிறுத்தி விட்டது. இந்தத் திட்டம் நிறுத்தப் பட்டதன் காரணமாக, தமிழ் நாட்டில் ஏழை சிறுபான்மையின மக்கள் கல்வி உதவித் தொகை யினை பெற இயலாமல்  கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளார்கள்.எனவே, ஒன்றிய அரசால் நிறுத்தப்பட்ட கல்வி உதவித்தொகையினை, 1 முதல்  8-ம் வகுப்பு வரை அரசு, மற்றும்  அரசு உதவி பெறும் பள்ளிகளில்  பயிலும் முஸ்லிம் மாணவியர் களுக்கு, தமிழ்நாடு அரசு நிதி  உதவியுடன் வக்ஃப் வாரியம் மூலம் வழங்கப்படும். இதன்  மூலம் 1 லட்சத்து 26 ஆயிரத்து  256 முஸ்லிம் மாணவியர்கள் பயன் பெறுவார்கள் உள்ளிட்ட  அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.