tamilnadu

மாணவர்கள் பலியானதற்கு நெல்லை சாப்டர் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம்

திருநெல்வேலி, டிச.24- கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி திருநெல் வேலி நகரில் சாப்டர் பள்ளியில் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து மூன்று மாணவர்கள் பலி யான சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து திருநெல்வேலியில் விபத்து ஏற்பட்ட பள்ளியில் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஓய்வுபெற்ற நீதிபதி துரை.ஜெயசந்திரன் நேரில் ஆய்வு செய்து விசாரணையை தொடங்கினார்.  இந்த  வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக் கைகள் குறித்து காவல்துறை துணை ஆணை யாளர் சுரேஷ்குமார் மற்றும் காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.   பள்ளி  நிர்வாகத்தின் அலட்சியமே சுவர் இடிந்த தற்குக் காரணம் எனக் கூறிய துரை.ஜெயச் சந்திரன், கழிப்பறை உரிய அடித்தளமின்றி கட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

4 ஆசிரியர்களுக்கு சம்மன்

இந்நிலையில், சாப்டர் பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயி ரிழந்தது தொடர்பாக நான்கு ஆசிரியர்களுக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளது.  விபத்து நடந்தபோது சம்பவ இடத்தில் இருந்த உடற்கல்வி ஆசிரியர் உட்பட நான்கு ஆசிரியர்களுக்கு காவல்துறையினர்  சம்மன் அனுப்பி உள்ளனர். காயமுற்ற மாணவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லவில்லை என்ற புகார்  எழுந்துள்ள நிலையில்,4 ஆசிரியர்களிடம்  காவல்துறையினர்  விசாரணை மேற்கொள்ள  உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

;