tamilnadu

img

கார்ப்பரேட் கைக்கு மாறும் விளை நிலங்கள்

திருப்பரங்குன்றம், செப்.25- விவசாயத்தை கார்ப்பரேட்மய மாக்குவதன் மூலம் விவசாயத்  தொழிலாளர்களை நிலங்களி லிருந்து வெளியேற்றும் முயற்சி யை ஒன்றிய பாஜக அரசு மேற்கொள்கிறது. விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழை மக்களுக்கு கிடைக்க வேண்டிய பொது விநியோகத்துறையையும் மோடி அரசு சீரழித்து வருகிறது என அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் பொது செயலாளர் பி.வெங்கட் குற்றம் சாட்டினார்.  அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநி லக்குழுக்கூட்டம் திருப்பரங் குன்றத்தில் ஞாயிறன்று நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த பி.வெங்கட் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- விவசாயிகள், விவசாயத்  தொழிலாளர்கள் மூலம் உற்பத்தி யாகும் உணவுப்பொருட்களுக்கு உலகில் எங்குமே வரி கிடையாது. இந்தியாவில் மோடி அரசு ஜிஎஸ்டி வசூலிக்கிறது. இதன் மூலம் உணவுப்பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது ரூ.40 மூதல்  ரூ.45 வரை விற்ற ஒரு கிலோ அரிசி இன்று கிலோ ரூ.60 வரை விற்கிறது. நாட்டில் விளை நிலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கார்ப்ப ரேட்டுகள் கைகளுக்கு சென்று  கொண்டிருக்கிறது. விவசாயத்தை யும் கார்ப்பரேட்மயமாக்க மோடி அரசு முயற்சிக்கிறது. 

ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை  என்ற நடவடிக்கையின் மூலம் தமி ழகம், கேரளம் உள்ளிட்ட மாநி லங்கள் ஏழை-எளிய மக்களுக்கு வழங்கிவரும் சலுகைகளை மோடி அரசு பறிக்க நினைக்கிறது. ரேஷன் விநியோகம் மாநில அர சின் கட்டுப்பாட்டில் இருந்தால் தான் பல்வேறு சலுகைகளைப் பெற  முடியும். ஒரே ரேஷன் அட்டை என் பது சலுகைகளைப் பறிப்பதற்கான முயற்சி. தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.  1.50 கோடி விவசாயத் தொழி லாளர்கள் தமிழகத்தில் உள்ள னர். இவர்களுக்கு ஓய்வூதியம், வீட ற்றவர்களுக்கு வீடுகள் கிடைப்ப தில் தமிழக அரசு கூடுதல் முயற்சி களை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

40 நாள் மட்டுமே வேலை

அமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.லாசர் கூறுகையில், “தமி ழகத்தில் 100 நாள் வேலைத்திட்டத் தில் நாற்பது நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. தொழி லாளர்களுக்கு சட்டக்கூலி வழங்குவது உறுதி செய்யப்பட வேண்டும். 100 நாள் மனித வேலை நாட்களை உறுதிப்படுத்துவது தான் 100 நாள் வேலையின் நோக்கம். இதற்கென ஒதுக்கப் படும் நிதி மடை மாற்றம் செய்யப் படுகிறது. குறிப்பாக கட்டு மானப் பணிகளுக்கு  பயன்படுத்தப் படுகிறது. ஒரு திட்டத்திற்கு ரூ.100 ஒதுக்கீடு செய்யப்பட்டால் அதில் ரூ.10 மட்டுமே தொழிலாளர்களின் கூலியாகும். ரூ.80 முதல் ரூ.90 வரை சிமெண்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் வாங்க பயன்படுத்தப்படுகிறது. கிட்டத்தட்ட ரூ.4,000 கோடி கட்டு மானப் பணிகளுக்காக மடை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுத் தேவைகளுக்காக விளை நிலங்களை பயன்படுத்தக் கூடாது. புதியதாக விமான நிலை யம் அமைப்பதற்கு விளை நிலங் களை கையகப்படுத்தக்கூடாது. தரிசு நிலங்களை உரிய இழப்பீடு கொடுத்து கையகப்படுத்தி விமான நிலையம் அமைக்க வேண்டும். தமிழகத்தில் விவசாயத் தொழி லாளர்களுக்கென தனித்துறையை உருவாக்க வேண்டும்” என்றார். பேட்டியின்போது  கந்தர்வ கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, மாநில  பொது செய லாளர்  வீ.அமிர்தலிங்கம், பொரு ளாளர் சங்கர் உடனிருந்தனர்.
 

;