வேளாண் விஞ்ஞானி ஆர்.ராஜ்குமாருக்கு சிறந்த வேளாண் சேவைக்கான விருது வழங்கல்
புதுக்கோட்டை, செப். 30- எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமா ருக்கு சிறந்த வேளாண் சேவைக்கான விருது வழங்கப்பட்டது. கேபி சர்வதேச நிறுவனத் தின் சிறந்த வேளாண் சேவைக் கான விருது வழங்கும் விழா, புதுக்கோட்டை அருகே, திரு மலைராய சமுத்திரத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. விழாவிற்கு முன்னோடி இயற்கை விவசாயி ஜி.எஸ். தனபதி தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் மற்றும் விவசாயத்தை மையமாகக் கொண்டு புதுதில்லியில் செயல்படும் கேபி தெற்காசிய நிறுவனத்தின் இயக்குநர் வினோத் பண்டிட், விஞ்ஞானி ஆர்.ராஜ்குமாருக்கு சிறந்த வேளாண் சேவைக்கான 2025 ஆம் ஆண்டின் கேபி தேசிய விருதை வழங்கி சிறப்பு ரையாற்றினார். தொடர்ந்து அவர் பேசுகையில்,”பயிர் மருத்துவ முகாம், டிஜிட்டல் வேளாண்மை போன்ற திட்டங்களில் ஆர்.ராஜ்குமார் ஒருங்கிணைப்பாளராக கடந்த 13 வருடங்களாக சிறப் பாக செயல்பட்டு வருகிறார். இவரது முயற்சியால் இத்திட்டம் 7 மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 60 ஆயிரத் துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளார்கள்’’ என்றார். இந்நிகழ்வில் புதுக்கோட் டை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் செந்தாமரை பாலு, குழந்தைகள் நலக்குழு தலைவர் கே.சதாசிவம், மரம் ராஜா, தமிழ்நாடு அறி வியல் இயக்க மாவட்டச் செய லாளர் எம். வீரமுத்து, முன் னோடி விவசாயிகள் முத்து லட்சுமி, காமராசு உள்ளிட் டோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக கள ஒருங்கிணை ப்பாளர் டி. விமலா வரவேற்க, கே.சிவகுமார் நன்றி கூறினார்.
