tamilnadu

எய்ம்ஸ் கல்லூரி மாணவர்கள் 50 பேருக்கு அனுமதி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை, பிப். 18 - மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 50 பேரை ராமநாதபுரம் புதிய அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்த்து  கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் மா. சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். சிந்தனை சிற்பி சிங்கார வேலரின் 163 வது பிறந்த நாளான வெள்ளியன்று (பிப்.18) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை  அமைச்சர் மா. சுப்பிரமணியன் மலர் தூவி மரியாதை செலுத்தி னார். இதனைத் தொடர்ந்து செய்தி யாளர்களிடம் அவர் கூறிய தாவது: கொரோனா பரிசோதனை, அறிகுறிகள் இருந்தால் மட்டுமே மேற்கொள்ள  வேண் டும். தொற்றின் எண்ணிக்கை குறைந்து வரும் பட்சத்தில் படிப் படியாக கொரோனா பரிசோ தனைகள் குறைக்கப்படும். ராமநாதபுரம் புதிய அரசு மருத்துவ கல்லூரியில், மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 50 பேரை சேர்த்து  கொள்ள தமிழக அரசு அனு மதி வழங்கியுள்ளது. எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டிட பணி களை விரைவு படுத்த மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கூட வலியுறுத்தி உள்ளோம். எய்ம்ஸ் கட்டுமானப் பணி களை விரைவுப்படுத்த ஒன்றிய  அரசுடன் பேசி வருகிறோம். மாணவர்களின் நலன் கருதி, மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கொடுத்துள்ளோம் என்றார். இந்நிகழ்வின்போது தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர்  மகேசன் காசிராஜன், மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயராணி,  செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வீ.ப. ஜெயசீலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.