tamilnadu

img

அரியலூரில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு

அரியலூரில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு

அரியலூர், ஜூலை 11-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், ஜூலை 10 முதல் 20 ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் தீக்கதிர் சிறப்பு சந்தா சேர்ப்பு இயக்கம் தொடங்கியுள்ளது.  அதையொட்டி அரியலூர் மாவட்டத்திலும் தீக்கதிர் சிறப்பு சந்தா சேர்ப்பு இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்  ஐ.வி.நாகராஜன் தொடங்கி வைத்தார். ஜூலை 10 இல் நடைபெற்ற மாவட்டக் குழுக் கூட்டத்தில் தீக்கதிர் மாவட்ட பொறுப்பாளர் ஏ.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். வெங்கடாஜலம், மாவட்டக் குழு உறுப்பினர் பி. பத்மாவதி உள்ளிட்டோர் தங்களுக்கான முதல் கட்ட ஆண்டு சந்தாவை மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜனிடம் வழங்கினர்.  நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் எம். இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர். மணிவேல், பி.துரைசாமி டி. அம்பிகா மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியையொட்டி, ஜூலை 19 ஆம் தேதி மாவட்டம் முழுவதும் மாவட்டக் குழு உறுப்பினர்கள், இடைக்குழு உறுப்பினர்கள் தீக்கதிர் சிறப்பு சந்தா வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  அனைத்து ஒன்றியங்களுக்கும் நேரடியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கூடுதலாக சந்தா சேர்க்கும் முயற்சியில் ஈடுபடுவது அன்று, மாவட்டம் முழுவதும் தீக்கதிர் சந்தாவுக்கான மொத்த கோட்டாவை முடித்து மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜனிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.