கரூர் உயிரிழப்பு: விஜய்யின் பொறுப்பற்ற செயல்பாடே காரணம் கலை, இலக்கியவாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் கண்டனம்
கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய ரோடு ஷோ நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோகத்திற்கு விஜய்யின் பொறுப்பற்ற அணுகுமுறையே நேரடி காரணம் என்று 200க்கும் மேற்பட்ட கலை, இலக்கியவாதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கடும் கண்டனத்துடன் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கி.சந்துரு, எழுத்தாளர்கள் இமையம், பெருமாள் முருகன், பாமா, அம்பை, பொன்னீ லன், வண்ணதாசன், திரைப்பட இயக்குநர்கள் ஞானராஜசேகரன், ரோஹிணி, ராஜூமுருகன், லெனின் பாரதி, தமுஎகச தலைவர்கள் ச.தமிழ்ச்செல்வன், மதுக்கூர் இராமலிங்கம், ஆத வன் தீட்சண்யா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் து.ரவிக்குமார் மற்றும் சல்மா, ‘தி இந்து’ என்.ராம், வழக்குரைஞர் ஹென்றி டிபேன், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது உள்ளிட்ட பலரும் இணைந்து வெளியிட்ட இந்த கூட்டறிக்கை, விஜய்யின் அர சியல் நடவடிக்கைகளில் தொடர்ந்து காணப் படும் பொறுப்பின்மையை கடுமையாக விமர்சித்துள்ளது. முந்தைய எச்சரிக்கை அறிகுறிகள் கரூர் நிகழ்வுக்கு முன்னதாக விக்கிரவாண்டி, மதுரை, திருச்சி, அரியலூர், நாகை ஆகிய இடங் களில் விஜய்யின் கூட்டங்கள் இந்தப் பேரழிவுக் கான முன்னோட்டமாகவே நடந்திருந்தன என்று கூட்டறிக்கை சுட்டிக்காட்டுகிறது. போக்குவரத்து விதிகளை மீறுதல், பொதுமக்களுக்கு அச்ச மூட்டும் வகையில் வாகனங்களில் பயணம் செய்தல், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்து தல், மின்கம்பங்கள், மரங்கள், கட்டிடங்களில் ஏறி சேதப்படுத்துதல் என அவரது கட்சியினர் தொட ர்ந்து பொறுப்புணர்வின்றி நடந்து கொண்டனர். இவர்களில் பெரும்பாலானோர் முப்பது வயதுக்குட்பட்ட இளைஞர்கள், புதிதாக அரசி யல் ஆர்வம் கொண்டவர்கள், விஜய்யின் சொல்லுக்கு கட்டுப்படக்கூடியவர்கள். இவர்களது அத்துமீறல்களை கண்டித்து நல்வழிப்படுத்த விஜய் எந்த முயற்சியும் எடுக்காமல், மாறாக அவர்களது அத்துமீறல்களை ரசிப்பவராகவும், அவை தனது பலம் என்று கருதியும் செயல்பட்ட தன் விளைவே இந்த அநியாய மரணங்கள் என்று கூட்டறிக்கை குற்றம் சாட்டுகிறது. கரூரில் என்ன நடந்தது? செப்டம்பர் 27ஆம் தேதி மாலை 7.20 மணிய ளவில் கரூர் வேலுசாமிபுரம் பகுதியில் நடந்த இந்த சோகத்திற்கு காணொலிச் சான்றுகள் தெளி வான படத்தை வழங்குகின்றன என்று அறிக்கை தெரிவிக்கிறது. விஜய் அறிவித்த நேரத்துக்கு வரா மல் 7 மணி நேரத்திற்கும் மேலாக மக்களை காத்தி ருக்க வைத்ததும், குடிநீர், உணவு, கழிவறை உள் ளிட்ட அடிப்படைத் தேவைகள் போதுமானதாக இல்லாதிருந்ததும், கூட்டத்திற்குள் வந்த பிறகும் முகம் காட்டாமல் மக்களை தன் வண்டிக்குப் பின்னே அலையவிட்டதுமே உயிரிழப்புக்கு காரணம். “சதி கோட்பாட்டுக்கு” மறுப்பு உயிரிழப்புகளுக்குப் பின் “திட்டமிட்ட சதி” இருப்பதாகவும், விஜய் மீது எந்தத் தவறு மில்லை எனவும் உண்மைக்கு மாறான ஒரு கட்டுக்கதையை விஜய் ஆதரவாளர்கள் பரப்பத் தொடங்கியுள்ளனர் என்று கூட்டறிக்கை குறிப்பிடு கிறது. மணிப்பூர் உள்ளிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த இயற்கைப் பேரிடர்கள், மோதல்கள், கலவரங்கள் பற்றி விசாரிக்கப் போகாத தேசிய ஜனநாயகக் கூட்டணி, கரூர் மர ணங்களுக்காக தனது நாடாளுமன்ற உறுப்பின ர்கள் குழுவை அனுப்பி “சதி” கட்டுக்கதையை வலுப்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்து வருவது ஏற்கத்தக்கதல்ல. தன் கண்முன்னேயே விபரீதம் நடப்பதை பார்த்தப் பிறகும் கவனம் செலுத்தி நிலைமை யைச் சீராக்காமல் அங்கிருந்து வெளியேறிப் போய் இரண்டு நாட்கள் அமைதி காத்த விஜய், செப்டம்பர் 30ஆம் தேதி வெளியிட்ட காணொலி யில் குற்றவுணர்ச்சியோ, வருத்தமோ, தார்மீகப் பொறுப்பேற்பதுவோ இல்லாமல், அரசின் மீது பழிசுமத்தி தப்பித்துவிடும் உள்நோக்கமே துருத்தி கொண்டுள்ளது என்று கூட்டறிக்கை கண்டிக்கிறது. அரசியல் முதிர்ச்சியின்மை விஜய் தனது கட்சியினரையும் ரசிகர்களை யும் சந்திப்பது அவரது ஜனநாயக உரிமை என்றாலும், அவர் தெரிவுசெய்துள்ள முறை இந்த நாட்டின் அரசியல் முதிர்ச்சிக்கும், பொது வாழ்க்கைக்கும், தனிமனிதக் கண்ணியத் திற்கும் உகந்ததல்ல என்று கூட்டறிக்கை சுட்டிக் காட்டுகிறது. “உழைப்பும், பொது சிந்தனையும், சமூக அக்கறையுமற்ற வழியில் அதிகாரத்தைப் பெறும் முனைப்பு மேலோங்கியுள்ளது. இழைத்துவிட்ட குற்றத்திலிருந்து தப்பிப்ப தற்காக, இதுவரை தனது கொள்கை எதிரி என்று குறிப்பிட்டு வந்த வலதுசாரிகளை அண்டி நிற்க வும் தயாராகிவிட்டார்” என்று அறிக்கை தெரி விக்கிறது. கலை, இலக்கியத்தின் பொறுப்பு கலையும் இலக்கியமும் சமூகத்தை மேம்படுத்துவதாக, விடுதலை உணர்வைத் தருவதாக, அடிமைச்சிந்தனைக்கு எதிராக தன்மதிப்புணர்வைத் தூண்டுவதாக இருக்க வேண்டும். ஆனால் விஜய்யின் அணுகுமுறை நேர்மைத்தன்மையற்றதாகவும், தனது ரசிகர்களை வேண்டுமென்றே தவறாக வழி நடத்துவதாகவும் உள்ளது என்று கூட்டறிக்கை விமர்சிக்கிறது. ரசிக மனப்பான்மையில் அவரது பின்னே திரண்டுள்ள சிறார்களையும் இளைஞர்களையும் மீட்டெடுத்து சமூகப் பொறுப்புணர்வும் தன்மதிப்பும் உள்ளவர்களாக வளர்த்தெடுப்பதில் கலை இலக்கியவாதிகளுக்கும் கூட்டுப்பொறுப்பு உள்ளது என்று அறிக்கை உணர்த்துகிறது. கூட்டறிக்கையில் தமிழ்நாடு அரசிடம் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த கூட்டறிக்கையில் நீதிபதிகள், எழுத்தா ளர்கள், கவிஞர்கள், திரைப்பட இயக்குநர்கள், ஊடகவியலாளர்கள், ஆய்வாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பதிப்பாளர்கள், கலைஞர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
