மதுரை, ஜூலை 8 - அரசு ராஜாஜி மருத்துவமனையில் 2021- ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாலின மாற்று மருத்துவப் பிரிவு இந்த மாதத்துடன் (ஜூலை) இரண்டு ஆண்டு களை நிறைவு செய்கிறது. இந்த இரண்டாண்டு பயணம் மருத்துவர்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தைக் கொடுத்துள்ளது. மதுரை அரசு மருத்துவமனை தென்னிந் தியாவில் உள்ள மற்ற மருத்துவமனை களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் மாறி வருகிறது. இம்மருத்துவமனை முதன்மையர் டாக்டர் ஏ.ரத்தினவேல் கூறுகையில், “திருநங்கைகளில் பலருக்கு அரசால் வழங்கப்பட்ட அடையாளச் சான்று இல்லாததால், சட்டப்பூர்வ நெகிழ்வுத் தன்மையுடன் பாலினத்தை உறுதிப் படுத்துவதையும் அறுவைச் சிகிச்சை க்குத் தேவையான நடைமுறைகளை யும் எளிமைப்படுத்தியுள்ளோம். இந்த அறுவைச் சிகிச்சை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் வரம்பிற்குள் வருவதால், தேவையான பல்வேறு சான்றிதழ்கள் விரைவில் வழங்குவதை உறுதி செய்கிறோம். அரசுத் துறையில், தென்னிந்தி யாவிலேயே பாலின மாற்று அறுவைச் சிகிச்சையை அதிக எண்ணிக்கையில் மேற்கொண்டதில் அரசு ராஜாஜி மருத்துவமனை முதலிடத்தில் உள்ளது” என்கிறார் பெருமிதத்துடன்.
உட்சுரப்பியல் நிபுணரும் மையத்தின் தலைவருமான டாக்டர். ஸ்ரீதர் கூறுகையில், “ஒவ்வொரு வியா ழக்கிழமையும், பிரத்யேக வெளி நோயாளிகள் பிரிவு, ஐந்து மருத்து வர்கள் கொண்ட குழுவுடன் செயல்படு கிறது. தற்போது வரை சுமார் 600 திருநங்கைகள் மருத்துவமனைக்கு வந்து சென்றுள்ளனர். 111 அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ள நிலையில், 105 பேருக்கு இருதரப்பு முலையழற்சி (மார்பகங்களை அகற்றுதல்) மற்றும் ஆறு பேருக்கு கருப்பை நீக்கம் (கருப்பை அகற்று தல்) ஆகிய அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு அதிகமானோர் (பெண்கள் முதல் ஆண் வரை) முன்வந்திருப்பது ஆச்சரியமாக இருந்தது. 25 பேருக்கு மார்பக மாற்று அறுவைச் சிகிச்சை, மூன்று பேருக்கு பெனெக்டோமி சிகிச்சை, (ஆணு றுப்பை அகற்றுதல், இருவருக்கு வஜி னோபிளாஸ்டி (பெண்ணுறுப்பு பொருத்துதல்) அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது” என்று விவரித் தார். மேலும் அவர் கூறுகையில், திருநங்கை, திருநம்பி மாற்றம் இளமைப் பருவத்தில் தொடங்கும் என்பதால், குடும்பம், பள்ளியிலிருந்தே விழிப்புணர்வு தொடங்க வேண்டும் என்றார். தருமபுரியைச் சேர்ந்த இல்லியரசி, திருநங்கைகளுக்கான பிரத்யேக வார்டில் மார்பக மாற்று அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு ஓய்வெடுத்து வருகிறார். பாரம்பரிய நாட்டுப்புற நடனக் கலைஞரான இவர், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நடனம் கற்றுக் கொடுக்கிறார்.
சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மல்டி ஸ்பெஷாலிட்டி திருநங்கைகள் மருத் துவமனை இருந்தாலும், அவர்களின் முதல் தேர்வு மதுரை அரசு மருத்துவ மனை தான் என்றார் இல்லியரசி. மேலும் அவர் கூறுகையில், “நான் ஒரு நாளைக்கு ரூ. 400 சம்பாதிக்கி றேன், மார்பக மாற்று அறுவை சிகிச்சைக்காக நான் தனியார் மருத்துவ மனைக்குச் சென்றால், ரூ.1 லட்சத்திற்கு மேல் செலுத்த வேண்டும். அறுவைச் சிகிச்சைகள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வருவதால், இது இலவசம்” என்றார். அறுவைச் சிகிச்சை செய்து கொண் டவர்களில் மற்றொருவரான அர்ச்சனா, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த வர். அவர் கூறுகையில், ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் எங்களை அரவ ணைத்து சிகிச்சையளிக்கின்றனர். இதனால் என்னைப் போல் பலர் மதுரை க்கு வர விரும்புகின்றனர் என்றார். தென்காசியில் உள்ள ஒரு டெக்ஸ் டைல் யூனிட்டில் பணிபுரியும் மாஹிக் குட்டி, இருதரப்பு முலையழற்சிக்குப் பிறகு குணமடைந்து வருகிறார். அவர் தனது பெற்றோருடன் வசிக்கா விட்டாலும், அறுவைச் சிகிச்சை குறித்து அறிந்த தமது நிறுவன உரிமையாளர் சிகிச்சை பெறுவதற்காக விடுமுறை அளித்துள்ளார் என்றார். மதுரையில் திருநங்கைகள் வள மையத்தை நடத்தி வரும் பிரியா பாபு கூறுகையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இந்தப் பிரிவு மிகப்பெரிய அளவில் சாதனை படைத்து வருகிறது. “இப்பிரிவு வாரத்தில் இரண்டு நாட்கள் இயங்க வேண்டும் என்பது எனது விருப்பம். திருநங்கைகள், திருநம்பிகளாக மாறுவதற்கான நடைமுறைகள் குறித்து பிராந்திய மொழிகளில் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க வேண்டும்” என்றார். அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள திருநங்கைகள் மருத்துவப் பிரிவு இரண்டாண்டை நிறைவு செய்துள்ளது. இப்பிரிவில் முதல மைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செய்யப் படும் அறுவைச் சிகிச்சைகள் மேற் கொள்ளப்படுவதால் மட்டுமல்ல; மருத்துவமனை மருத்துவர்கள், செவி லியர்களுடன் பயனாளிகள் ஒத்து ழைப்பதால் தான் இது சாத்தியமாகி யுள்ளது என்றால் அது மிகையல்ல.