tamilnadu

img

தொழில்முறை ரவுடிகளின் தொடரும் அட்டூழியம் ஆவுடையார்கோவிலில் வாலிபர் சங்க நிர்வாகி மீது கொலைவெறித் தாக்குதல்!

அறந்தாங்கி, நவ. 28 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் ஒன்றிய நிர்வாகி முகம்மது சாலிவு மீது, தொழில்முறை ரவுடிகள் கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. இதில் படுகாயம் அடைந்த முகம்மது சாலிவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடை யார்கோவிலைச் சேர்ந்தவர் முகம்மது சாலிவு (19). இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றியப் பொரு ளாளராக உள்ளார். ஆவுடையார் கோவில் கடைவீதிகளைச் சுற்றி மிகமோசமான வகையில் சாக்கடை தேங்கிக் கிடக்கும் நிலையில், வடி கால், வாய்க்கால் கழிவுகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி வாலிபர் சங்கத்தின் ஆவுடையார்கோவில் ஒன்றியக்குழு சார்பில் செவ்வாயன்று போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந் தது. இதற்கான பணிகளை முகம்மது சாலிவு முன்னின்று செய்து வந்தார். போராட்டத்தன்று 200-க்கும் மேற்பட்ட வாலிபர் சங்கத்தினர் ஆவுடையார்கோயிலில் திரண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர், காவல்துறை அதி காரிகள், ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை சேர்ந்த வர்கள், பேச்சுவார்த்தை நடத்தி அந்த  பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் களை தூர்வாரி உடனடியாக வேலை களை தொடங்கி சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர்.  இதனால் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.  இது ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே வாலிபர் சங்கத்தின் ஒன்றிய பொருளாளர் முகமது சாலிவு மீது, தொழில்முறை ரவுடியான வில்லியம்ஸ் என்பவர் பீர்  பாட்டிலால் முகமது சாலிவுவின் தலை யில் தாக்கியுள்ளார். இதில், முகம்மது  சாலிவு படுகாயம் அடைந்த நிலையில், அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு ஆவுடையார்கோவில் அரசு மருத்துவ மனையில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ள னர். இந்தச் சம்பவம் ஆவுடையார் கோயிலில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.