கரூர், அக்.12 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் ஒன்றியக் குழு சார்பில் மாபெரும் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் வேலா யுதம்பாளையம் கடைவீதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஜி.ஜீவானந்தம் தலைமை வகித்தார். கரூர் ஒன்றியச் செயலாளர் எம்.ராஜேந்திரன் வரவேற்றார். சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் சிறப்புரையாற்றினார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா, மாவட்டச் செயலாளர் மா. ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் புகழூர் நகராட்சி மன்ற உறுப்பினர் இந்துமதி அரவிந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒன்றியக் குழு உறுப்பினர் அ.காதர்பாட்சா நன்றி கூறினார்.