யுபிஎஸ்சி தேர்வுக்கு அடுத்தபடியாக இருப்பது எஸ்எஸ்சி (ஸ்டாப் செலக்ஷன் கமிஷன்) ஆகும். ஒன்றிய அரசு துறைகளில் முக்கியமான பதவிகள் நிரப்பப்படுவதால் இந்த தேர்வு முதன்மையான போட்டித் தேர்வாக பார்க்கப்படுகிறது. நடப்பாண்டு தொடக்கத்தில் ஆடிட்டர், மூத்த செயலக உதவியாளர், உதவியாளர், உதவி தணிக்கை அதிகாரி, உதவி அமலாக்க அதிகாரி, சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர், ஆராய்ச்சி உதவியாளர், கணக்காளர், இளநிலை புள்ளியியல் அதிகாரி, புள்ளியியல் ஆய்வாளர், எழுத்தர் உள்ளிட்ட துறைகளில் 7,900 காலியிடங்களை எஸ்எஸ்சி நிரப்பவுள்ளது. மொத்த காலியிடம் : 7,900 தகுதி : பட்டப்படிப்பு (சி.ஏ., சி.எம்.ஏ, தேர்ச்சி கட்டாயம் - துறை சார்ந்த பிரிவுகளுக்கு) வயது : 18 முதல் 32க்குள் தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து தேர்வு, திறன் அறிவு தேர்வு. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி: 23-1-2022. கூடுதல் விபரங்களுக்கு https://ssc.nic.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.