tamilnadu

img

திண்டுக்கல்லில் 694 தீக்கதிர் சந்தா தொகை ரூ.9.29 லட்சம்

திண்டுக்கல், ஜுலை 13- திண்டுக்கல்லில் நடைபெற்ற  தீக்கதிர் சந்தா வழங்கும் விழாவில் 694 சந்தாக்களுக்கான  தொகை ரூ.9 லட்சத்து 29 ஆயிரம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது.  திண்டுக்கல் வி.பி.சிந்தன் நினைவகத்தில் தீக்கதிர் சந்தா வழங்கும் விழா வியாழனன்று நடைபெற்றது.  இதில்   5 ஆண்டு சந்தா ஒன்று,  277 ஆண்டு சந்தாக்கள்,  6 மாத சந்தாக்கள் 328 , மூன்று மாத சந்தாக்கள் 5 உட்பட 694 சந்தாக்களுக்கான தொகை 9 லட்சத்து 28 ஆயிரத்து 850 ரூபாயை மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.முத்துச்சாமி வழங்கினார்.  43 செம்மலர், 35 மார்க்சிஸ்ட் சந்தாக்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினரும் தீக்கதிர் ஆசிரியருமான மதுக்கூர் இராமலிங்கம், மாநிலக்குழு உறுப்பினரும் தீக்கதிர் முதன்மை பொது மேலாளருமான என்.பாண்டி, மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.