tamilnadu

img

வாய்ப்பு வாசல்

இந்திய ரயில்வேயில் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு - 5,810

ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் இந்திய ரயில்வேயில் பல் வேறு பணிகளுக்கான காலியிடங் களை நிரப்புவதற்கான அறிவிக்கை (CEN 06/2025) வெளியாகியுள்ளது. மொத்தம் 5 ஆயிரத்து 810 பணியிடங் களை நிரப்பப் போகிறார்கள்.  1. சீஃப் கமர்சியல் &டிக்கெட் சூபர்வைசர் - 161 2. ஸ்டேசன் மாஸ்டர்  - 615  3. கூட்ஸ் டிரெய்ன் மேனேஜர் - 3416 4.ஜூனியர் அக்கவுன்ட்ஸ் அசிஸ்டென்ட்     &டைப்பிஸ்ட் - 921 5. சீனியர் கிளார்க் &டைப்பிஸ்ட் - 638 6. டிராஃபிக் அசிஸ்டென்ட் - 59 கல்வித்தகுதி - அனைத்துப் பணி யிடங்களுக்கும் குறைந்தபட்சமாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழ கத்தில் இருந்து இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வரிசை எண்  4 மற்றும் 6இல் தரப்பட்டுள்ள பணி யிடங்களுக்குக் கூடுதலாக தட்டச்சுத் திறன் இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வுகளுக்குப் பிறகு, திறன்தேர்வு நடத்தப்படும். விண்ணப்பங்களை நிரப்பத் தொடக்கத் தேதி -  21.10.2025 விண்ணப்பங்களை நிரப்பக் கடைசித் தேதி - 20.11.2025 தேர்வுக்கான தேதிகள் ரயில்வே  தேர்வாணையத்தின் இணைய தளத் தில் அவ்வப்போது வெளியாகும்.  வயது வரம்பு - அனைத்துப் பணி யிடங்களுக்கும் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிக பட்ச வயது வரம்பு 33 ஆகும். 01.01.2026  ஆம் தேதிப்படி வயது கணக்கிடப் படும். அனைத்துப் பிரிவினரும். 01.01.2008க்கு பின்பாகப் பிறந்திருக்கக் கூடாது. அதிகபட்ச வயது வரம்பைப் பொறுத்தவரையில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு(ஓபிசி) 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு  5 ஆண்டுகளும் தளர்ச்சி வழங்கப்படும். தேர்வு முறை - அனைத்துப் பணி யிடங்களுக்கும் இரண்டு கட்டத் தேர்வு  நடத்தப்படும். முதல்கட்டத் தேர்வில் 100 வினாக்கள் இருக்கும். 90 நிமிடம் நடக்கும் இந்தத் தேர்வில் பொது அறிவு 40, கணிதம் - 30, ரீசனிங் - 30 என்ற  எண்ணிக்கையில் வினாக்கள் இருக்கும். இரண்டாம் கட்டத் தேர்வில் 120 வினாக் கள் இருக்கும். 90 நிமிடம் நடக்கும் இந்தத் தேர்வில் பொது அறிவு - 50,  கணிதம் - 35, ரீசனிங் - 35 என்ற எண்ணிக் கையில் வினாக்கள் இருக்கும்.  ஒவ்வொரு தவறான விடைக்கும் 1/3  மதிப்பெண் கழிக்கப்படும். தேவைப் படும் பணியிடங்களுக்கு திறன்தேர்வு நடக்கும். சாதிச் சான்றிதழ், மாற்றுத் திறனாளி களுக்கு சான்றிதழ் ஆகியவற்றிற்கான மாதிரிப் படிவங்கள் அறிவிக்கை யில் தரப்பட்டிருக்கிறது. விண்ணப் பிக்கும்போது நிரப்பப்பட்ட சான்றி தழ்கள் கையில் இருக்க வேண்டும். உதவியாளர் தேவைப்படும் பார்வை மாற்றுத் திறனாளிகள், உதவியாளரின் விபரங்களை விண்ணப்பத்தை நிரப்புகையில் தர வேண்டும். கூடுதல் விபரங்களுக்கும், விண்ணப்பத்தை நிரப்புவதற்கும் www.rrbchennai.gov.inஎன்ற இணையதளத்தில் உள்ள இணைப்பிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். 

தரைப்படையில் வேலைவாய்ப்பு - 143

இந்தியத் தரைப்படையில் நேரடியாக ‘லெப்டினெண்ட்’ பணியில் அமர்வதற்கான வேலைவாய்ப்பு பொறியியல் பட்டதாரிகளுக்கு வந்துள்ளது. பொறியியல் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டில் படிப்ப வர்களும் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச வயது 20 என்றும், அதிகபட்ச வயது 27 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  கூடுதல் விப ரங்களுக்கும், விண்ணப்பத்தை நிரப்பவும் www.joinindianarmy.nic.inஎன்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பத்தை நிரப்புவதற்கான கடைசித்தேதி நவம்பர் 11, 2025 ஆகும்.

விளையாட்டு வீரரா?

மத்தியக் காவல் படைகளில் ஒன்றான எல்லைப் பாது காப்புப் படையில்(BSF) கான்ஸ்டபிள் பணியிடங்களை ஆண் மற்றும் பெண் விளையாட்டு வீரர்களைக் கொண்டு நிரப்ப விருக்கிறார்கள். மொத்தம் 391 இடங்களைக் கொண்ட இந்தப் பணி நிரப்புதலில் 18 வயது முதல் 23 வயது வரைக்கும் உள்ள வர்கள் பங்கேற்கலாம். குறைந்தபட்சக் கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு ஆகும். விளையாட்டுத்திறன், உடற்தகுதி, மருத்துவத் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு இருக்கும். தகுதிக்கான விளையாட்டுப்பிரிவுகள் உள்ளிட்ட கூடுதல் விபரங்கள் www.rectt.bsf.gov.inஎன்ற இணையதளத்தில் கிடைக்கும். விண்ணப்பிக்கக் கடைசித்தேதி நவம்பர் 4, 2025 ஆகும்.

இந்தியா போஸ்ட் வங்கியில் வாய்ப்பு - 348

தபால்துறையின் கீழ் இயங்கும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் 348 செயல் அலுவலர் பணியிடங்களை நிரப்பப் போகிறார்கள்.  கல்வித்தகுதி - அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் இருந்து ஏதாவதொரு பாடத்தில் இளங்கலை பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும்.  வயது வரம்பு - குறைந்தபட்சமாக 20 வயதும், அதிகபட்சமாக 35 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்ச்சி தரப்படும். தேர்வு முறை - ஆன்லைனில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள், தபால் துறையில் GDS மற்றும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி ஆகியவற்றில் பணிபுரிந்த அனுபவம் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்தப் பணியிட நிரப்புதல் குறித்த கூடுதல் விபரங்களுக்கு http://www.ippbonline.comஎன்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பம் நிரப்புவதற்குக் கடைசித் தேதி அக்டோபர் 29, 2025 ஆகும்.