தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 4ஆவது மாநில மாநாடு செங்கல்பட்டு சிங்கபெருமாள் கோயில் அருகே தோழர் டி.லட்சுமணன் நினைவரங்கில் செவ்வாயன்று (செப். 20) துவங்கியது. பிரதிநிதிகள் மாநாட்டில் சங்க கொடியை மாநில துணைத்தலைவர் பி.திருப்பதி ஏற்றி வைத்தார். தியாகிகளின் நினைவு ஸ்தூபிக்கு மாநிலத் தலைவர் பா.ஜான்ஸி ராணி பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன் உள்ளிட்ட பிரதிநிதிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.பின்னர் தொடங்கிய பிரதிநிதிகள் மாநாட்டில் மாநில பொதுச்செயலாளர் எஸ்.நம்புராஜன் வேலை அறிக்கையையும், பொருளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர்.