tamilnadu

img

தருமபுரி மாவட்டத்தில் 428 தீக்கதிர் சந்தா

தருமபுரி, ஜூலை 10 - தீக்கதிர் நாளிதழின் தீவிர  சந்தா சேர்க்கும் இயக்கத்தின் ஒருபகுதியாக தருமபுரி மாவட்டத்தில், முதற்கட்டமாக 428 தீக்கதிர் சந்தா சேர்க்கப்பட்டுள்ளது. இதனை மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணனிடம் வழங்கி னர்.  தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தீக்க திர் சந்தா ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற சந்த அளிப்பு கூட்டத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் கே.பூபதி தலைமை ஏற்றார். இதில், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாவட்ட செயலாளர் ஏ.குமார், மூத்த தலைவர் பி.இளம்பரிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.நாகராசன், ஆர்.சிசு பாலன், எம்.முத்து, எஸ். கிரைஸாமேரி, வே.விசுவ நாதன், தருமபுரி நகரசெய லாளர் ஆர்.ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர் தரும புரி என்.கந்தசாமி, நல்லம் பள்ளி எஸ்.எஸ்.சின்னராஜ், பாலக்கோடு டி.எஸ்.ராமச் சந்திரன், காரிமங்கலம் பி. ஜெயராமன், இண்டூர் சிவப்பிரகாசம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஏ. ஜெயா, கே.எல்லப்பன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.  இதேபோன்று, பென்னா கரம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சந்தா சேர்ப்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.விசுவநாதன் தலைமை வகித்தார்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.மாதன், ஒன்றிய செயலாளர்கள் பென்னாகரம் பகுதி ரவி, கிழக்கு ஜி.சக்திவேல், பாப்பாரப்பட்டி ஆர்.சின்ன சாமி, ஏரியூர் என்.பி. இளங்கோ, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆ.ஜிவா னந்தம், அன்பு,ராஜி,சுதா பாரதி ஆகியோர் பங்கேற்ற னர். அரூர் கட்சி அலுவல கத்தில் நடைபெற்ற சந்தா சேர்ப்பு நிகழ்ச்சியில், வட்ட செயலாளர் பி.குமார்  தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சோ.அர்ஜூனன், ஆர்.மல்லிகா, பாப்பிரெட்டிபட்டி வட்டசெயலாளர் தி.வ.தனு ஷன், மொரப்பூர் ஒன்றிய செயலாளர் தங்கராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் சி.வஞ்சி ஆகியோர் பங்கேற்றனர். இதில், தருமபுரி மாவட்டத் தில் 268 ஓர் ஆண்டு சந்தா வும், 140 அரையாண்டு சந்தா,  மாதசந்தா 20 என மொத்தம் 428 தீக்கதிர் சந்தாவுக்கான தொகை ரூ.6 இலட்சத்து 87 ஆயிரம், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் இடைகமிட்டி செய லாளர்கள்  தீக்கதிர் சந்தா வுக்கான தொகையை அளித்தனர்.