இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25ஆவது அகில இந்திய மாநாடு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25ஆவது அகில இந்திய மாநாடு பஞ்சாப்பில் (சண்டிகர்) செப்., 21 அன்று தொடங்கியது. மொஹாலியில் பொதுக்கூட்டம், சண்டிகரில் பிரதிநிதிகள் அமர்வு, விவாதம், நிர்வாகிகள் தேர்வு உள்ளிட்ட நிகழ்வுகளுடன் வியாழக்கிழமை அன்று நிறைவு பெற்றது. இந்த மாநாட்டின் பொது அமர்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, சிபிஐ பொதுச் செயலாளர் து.ராஜா, சிபிஐ (எம்-எல்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, பார்வர்டு பிளாக் தலைவர் ஜி.தேவராஜ், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் பாலஸ்தீன ஆதரவு தொடர்பாக சிறப்பு அமர்வும் நடைபெற்றது.
