tamilnadu

img

திருவாரூரில் 24 ஆவது அகில இந்திய மாநாடு விளக்கப் பேரவை மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பங்கேற்பு

திருவாரூரில் 24 ஆவது அகில இந்திய மாநாடு விளக்கப் பேரவை

மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பங்கேற்பு

திருவாரூர், ஜூலை 3-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றிய அரசியல் மற்றும் ஸ்தாபன தீர்மானம் விளக்க பேரவை கூட்டம் திருவாரூர் வர்த்தகர் சங்க கட்டிடத்தில் சிபிஎம் மாவட்டகுழு சார்பாக வியாழக்கிழமை நடைபெற்றது. பேரவைக்கு சிபிஎம் மாவட்டசெயலாளர் டி.முருகையன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேரவை பங்கேற்று ஸ்தாபன தீர்மானத்தை விளக்கி சிறப்புரையாற்றினார். மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன அரசியல் தீர்மானத்தை விளக்கி பேசினார். பேரவை கூட்டத்தில் கட்சியின் செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகரக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிராக்சன் உறுப்பினர்கள் உள்ளிட்ட 200 பேர் கலந்து கொண்டனர். பேரவையில், பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழுக்கு முதல் கட்டமாக 25 ஆண்டு சந்தா தொகை மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திடம் வழங்கப்பட்டது.