மாமேதைகள் காரல் மார்க்சும், பிரடெரிக் ஏங்கல்ஸ்சும் 175 ஆண்டுகளுக்கு முன்பு பிப்.21 ஆம் தேதி கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை வெளியிட்டனர். தற்போது அந்த நாள் சிவப்பு புத்தக தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதையொட்டி சென்னையில் புதனன்று மாநில கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் கம்யூனிஸ்ட் அறிக்கையை வாசித்தனர்.