tamilnadu

img

கிள்ளியூர் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்

கிள்ளியூர் ஊராட்சியில்  ‘உங்களுடன் ஸ்டாலின்’  சிறப்பு முகாம்

மயிலாடுதுறை, ஆக 1-  மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம், கிள்ளியூர் ஊராட்சியில்  `உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு, வட்டாட்சியர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு) பிரன்ஸ்வா, வட்டார வளர்ச்சி அலுவலர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முகாமில், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாத்தூர், காழியப்பநல்லூர், கிள்ளியூர் ஊராட்சியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, மகளிர் உரிமை தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா மற்றும் வேளாண் சார்ந்த 300-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை வழங்கினர். முகாமில், எம்எல்ஏ நிவேதா முருகன், முகாமை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றார்.