tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஎம் பேரவை'

நாகப்பட்டினம், ஆக.6 - மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நாகப் பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வடக்கு ஒன்றிய பேரவை, கரி யாப்பட்டினம் சமுதாயக்  கூடத்தில் ஒன்றியச் செய லாளர் ஏ.வெற்றியழகன் தலைமையில் செவ்வா யன்று நடைபெற்றது. ஒன்றியத்தின் புதிய செயலாளராக வ.அம்பி காபதி தேர்ந்தெடுக்கப் பட்டார். கட்சி உறுப்பினர் சீட்டு வழங்கியும், அகில  இந்திய மாநாட்டு தீர்மா னங்களை விளக்கியும் மாவட்டச் செயலாளர் வி. மாரிமுத்து, மாவட்ட  செயற்குழு உறுப்பி னர்கள் வி.சுப்பிரமணி யன், கே.சித்தார்த்தன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.

பருத்தி மறைமுக ஏலம்

பாபநாசம், ஆக. 6 - தஞ்சாவூர் விற்ப னைக் குழுவின்கீழ் இயங்கி வருகிற பாப நாசத்தை அடுத்த கபிஸ் தலம் அருகே கீழகொட் டையூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. ஏலத்திற்கு விற்பனைக் கூட கண்கா ணிப்பாளர் பிரியமாலினி தலைமை வகித்தார். மின்னணு தேசிய வேளாண் சந்தை சார்பில்  நடைபெற்ற பருத்தி ஏலத் தில், கும்பகோணம், அதன்  சுற்று வட்டா ரத்தை சார்ந்த 574 விவசா யிகள், 115 மெட்ரிக் டன் அளவு பருத்தி எடுத்து வந்தனர். மகாராஷ்டிரா, ஆந்திரா, கும்பகோணம், செம்பனார்கோவில், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வணிகர்கள் பங்கேற்று அதிகபட்சம் ரூ.7,809, குறைந்தபட்சம் ரூ.7,399, சராசரி ரூ.7,609 என விலை நிர்ணயித்தனர். பருத்தியின் தோராய மதிப்பு ரூ.85.58 லட்சம்.

தண்ணீர்,  மின்சார வசதி கோரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

திருவாரூர், ஆக.6 - திருவாரூர் மாவட்டம்  நன்னிலம் அரசு கலை  மற்றும் அறிவியல் கல்லூரியில் தண்ணீர்,  மின்சாரம் பற்றாக்குறை யாகவும், வகுப்பறை மற்றும் கழிவறைகள் சுகா தாரக் கேடாகவும் உள்ளன. உடனடியாக இக்கோரிக்கைகளை நிறைவேற்றிடக் கோரி  இந்திய மாணவர் சங்கத் தின் தலைமையில், நன்னி லம் அரசு கலை அறி வியல் கல்லூரி மாண வர்கள் உள்ளிருப்பு போ ராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாணவர் சங்கத்தின் நன்னிலம் கிளைச் செய லாளர் அ.பிரசன்னா தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலை வர் சி.அட்ஷயா மற்றும்  மாவட்டக் குழு உறுப்பி னர்கள் ஹரிஷ், ஆசாத்  மற்றும் கிளை நிர்வாகி கள், கல்லூரி மாணவர் கள் கலந்து கொண்டனர். 

ஆக.9 குறைதீர் கூட்டம் '

கரூர், ஆக.6 - கரூர் மாவட்டத்தில் பொது  விநியோகத் திட்ட மக்கள் குறை தீர் கூட்டம் 9.8.2025 அன்று  காலை 10 மணி முதல் 1 மணி வரை கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகளூர்,  குளித்தலை, கிருஷ்ணராய புரம் மற்றும் கடவூர் வட்ட  வழங்கல் அலுவலகங்களில்  நடைபெற உள்ளது என  மாவட்ட ஆட்சியர் மீ.தங்க வேல் தெரிவித்துள்ளார்.

‘உங்களுடன் ஸ்டாலின்’  திட்ட முகாம்\

பாபநாசம், ஆக. 6 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே கணபதி அக்ரஹாரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட  முகாம் நடந்தது. கணபதி அக்ரஹாரம், கோவிந்தநாட்டுச் சேரி, உள்ளிக்கடை உள்ளிட்ட 3  ஊராட்சிகளுக்கான ‘உங்க ளுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை கும்பகோணம் எம்.எல்.ஏ அன்பழகன் தொடங்கி வைத்தார். ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ரவிச்சந்திரன், பாப நாசம் தாசில்தார் பழனி வேல், பாபநாசம் பி.டி.ஓ-க்கள்  சிவகுமார், விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர். இதில் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா,  விதவை சான்று, இருப்பிட  சான்று, ஓ.பி.சி சான்று, வரு மான சான்று, பட்டா மாறுதல் ஆணை, சாதி சான்று, முதல்  பட்டதாரி சான்று உள்ளிட்ட  நலத் திட்டங்கள் வழங்கப் பட்டன. முகாமில் பெறப்பட்ட  மனுக்கள் உரிய நடவடிக்கைக் காக தொடர்புடைய துறை களுக்கு அனுப்பப்பட்டன.