tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஆஸ்கர் விருதுப் பட்டியலில் ‘கூழாங்கல்’ திரைப்படம் இடம்பெற்றிருப்பது குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ளத் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். 

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 20,400 கன அடியாக சரிந்தது.

நாகலாந்தில் அமல்படுத்தியுள்ள ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச்  சட்டத்தை திரும்பப் பெற வலி யுறுத்தி ஒன்றிய அரசுக்கு கடிதம்  எழுதப்படும் என நாகாலாந்து அமைச்சரவையில் முடிவெடுக்கப் பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா திங்கள்கிழமை மாலை சந்தித்து பேசினார்.

திருச்சி புங்கனூர் பகுதியில் அரியாற்றில் ஏற்கெனவே  உடைப்பு ஏற்பட்ட இடத்திலேயே மீண்டும் அடுத்தடுத்து இரு இடங்களில் உடைப்பு ஏற்பட்டதை அடுத்து திருச்சி மாநகரப் பகுதிகளில் மீண்டும்  வெள்ளம் சூழ்ந்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றினால் தொழில் முடக்க நிலையிலிருந்து தொழில் முனைவோர் மீள வழி வகை செய்யும் பொருட்டு சிட்கோ தொழில் மனைகளின் விலையை குறைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

நாட்டில், 44 கோடி ஜன்தன் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களில், 55 சதவீதத்துக்கும் மேற்பட்ட வர்கள் பெண்கள் என்று நாடாளு மன்றத்தில் ஒன்றிய நிதி யமைச்சகம் தெரிவித்துள்ளது.

அடுத்தாண்டு ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து வாரம் 4.5 நாள் மட்டுமே வேலை நேரம் இருக்கும் என ஐக்கிய அரபு நாடுகள் கூட்ட மைப்பு தெரிவித்திருக்கிறது.

இந்தியாவில் இதுவரை 128.76 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டு ள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரி வித்துள்ளது.

இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க் கட்சி எம்.பி.க்களின் போராட்டத்  தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் செவ்வாய்க்கிழமை பங்கேற்றார்.