tamilnadu

img

கேரளத்தை முற்றாக புறக்கணித்த மத்திய பட்ஜெட் கிடப்பில் சபரிமலை ரயில் பாதை: கேரள முதல்வர்

திருவனந்தபுரம், ஜன. 1- கேரளத்தின் நியாயமான தேவைகளை முற்றாக புறக்கணித்து நிதிநிலை அறிக்கையை மத்திய அரசு சமர்ப்பித்துள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். சபரிமலை ரயில்பாதை, மிதவேக நெடுஞ்சாலை போன்ற வற்றை பட்ஜெட் கண்டுகொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.   மத்திய நிதி அமைச்சர் சனியன்று நாடாளு மன்றத்தில் சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கை குறித்து அவர் மேலும் கூறியதாவது: கூட்டுறவு சங்கங்கள் மீது 22 சதவிகிதம் வரியும், சேவை வரியும் விதித்துள்ள மத்திய பட்ஜெட் அறிவிப்பு கூட்டுறவு அமைப்புகளுக்கும் அவற்றின் பொறுப்பில் நடத்தப்படும் நிதி நிறுவனங்களுக்கும் ஆபத்தானது. கூட்டுறவுத் துறையை வளர்க்க வேண்டிய தருணத்தில் அவற்றை அழிக்கும் வரி விதிப்புடன் முன்னோக்கிச் செல்வது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

மத்திய வரியிலிருந்து மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய நிதியில் ஏற்பட்டுள்ள பெரும் வீழ்ச்சி கவலையளிப்பதாகும். இது எவ்வளவு பெரிய வீழ்ச்சியாக மாறும் என்பது போகப்போக தெரியும். கேரளத்தின் நியாயமான தேவைகளை முற்றிலுமாக மத்திய பட்ஜெட் புறக்கணித் துள்ளது. இயற்கை பேரழிவுக்கான நிதியை பிற மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்த மத்திய அரசு. கேரளத்தை பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலிலிருந்து கடந்த மாதம் விலக்கியுள்ளது. அதே அரசியல் மனநிலையில் கேரளத்தை பட்ஜெட்டிலும் புறக்கணித்துள்ளது.     பொதுத்துறை அமைப்புகளை மேலும் அதிகமாக விற்றழிப்பதற்கு வழிவகுக்கும் மத்திய  பட்ஜெட் கேரளத்தில் உள்ள கொச்சி கப்பல் கப்பல் துறைமுகம், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் போன்றவை செயல்படுவதற்கான பணம் ஒதுக்கப் படவில்லை. மேலும், நிகழ்காலத்துடன் ஒப்பிடும்போது, பல பகுதிகளில் வெட்டுச் சுருக்கும் வேலையை  மத்திய பட்ஜெட் செய்துள்ளது. ஜிஎஸ்டியில் உரிய பங்கை தொடர்ச்சியாக மறுத்து வருகிறது மத்திய அரசு. விவசாய நிலம் தொடர்பாக மாநிலத்தின் அதிகாரத்தை கூட்டாட்சி  முறைக்கு விரோதமாக பறிப்பதற்கான முயற்சி யையும் செய்கிறது.

செமி ஹைஸ்பீடு கேரிடார், அங்கமாலி-சபரி ரயில் பாதை, ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை, கடன் அளவை உயர்தல், ரப்பர் மானியம் உயர்த்தல்,  கேரளத்திற்கு ஒரு எய்ம்ஸ், பாக்ட் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கான முதலீடு, தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சியை துரிதப் படுத்தல், வெளி நாடுகளிலிருந்து நாடு திரும்பு வோருக்கான மறுவாழ்வு உள்ளிட்ட கேரளத்தின் ஏராளமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டி ருந்தன. விரிவான கடிதம் அளிக்கப்பட்டது. ஆனால் அவற்றில் எவ்வித பரிசீலனையும் நடத்தப்பட வில்லை. கார்ப்பரேட் வரியில் சலுகைகள் அளிக்கப் பட்டுள்ளதும், வேளாண் விளைபொருட்கள் உற்பத்தி அதிகரிப்புக்கு திட்டங்கள் இல்லாததும், எல்ஐசியில் அரசு பங்கை விற்றழிக்க தீர்மானித்தி ருப்பதும் மத்திய அரசு எந்த பகுதியினருடன் நெருக்கமாக உள்ளது என்பதை தெளிவு படுத்து கின்றன. பட்ஜெட் என்பது பெரிய மந்தநிலைகள் மற்றும் சிரமங்களை மீறி உலகமயமாக்கல் கொள்கைகள் தொடர்ந்து வலுப்பெறும் என்ற  அறிவிப்பாகும். இந்த பட்ஜெட்டில் கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் குறித்து அதிகம் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பி டத்தக்கது. இந்த பட்ஜெட் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது, சமூக பாதுகாப்பை உறுதி செய்வது அல்லது வளர்ச்சிக்கு இட்டுச் செல்வது அல்ல. மாறாக, இந்த பட்ஜெட் பணவீக்கம் மற்றும் வேலையின்மை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சீரான வளர்ச்சி யை உறுதி செய்ய வேண்டும். ஆனால் பட்ஜெட்டும் மத்திய அரசும் எதிர் திசையில் நகர்கின்றன என முதல்வர் கூறினார்.

;