tamilnadu

பள்ளி, கல்லூரியில் விழா

 பெரம்பலூர், ஆக.17- பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில் சுதந்திர தினவிழா நடைபெற்றது. பள்ளியின் துணைமுதல்வர் சாரதா செந்தில்குமார் வரவேற்றார். தாளாளர் ஆ.ராம்குமார் தலைமை வகித்து தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் செயலர் சிவக்குமார், பங்குதாரர்கள் ரெங்கசாமி, மோகனசுந்தரம் ஆசிரியர்கள் ஹேமா, சந்திரோதயம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வள்ளலார் குருகுலம் கல்வி நிறுவனங்கள் சார்பில் வள்ளலார் குருகுலம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளி முதல்வர் பரிமளாகாந்தி கொடியேற்றினார். சன்னாநல்லூர் வள்ளலார் குருகுலம் மழலையர் தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை கலைவாணி கொடியேற்றினார்.  வாழ்க்கை வள்ளலார் குருகுலம் மழலையர் தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை உதயநிலா தலைமையில் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் ரேணூக விஜயகுமார் கொடியேற்றினார். திருமருகல் வள்ளலார் குருகுலம் மழலையர் தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயலெட்சுமி கொடியேற்றினார். மாணவ- மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன