தஞ்சாவூர், ஜன.13- தஞ்சை மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி ஆதனூர் புனித அன்னாள் உயர்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டாக்டர் வேத.குஞ்சருளன் தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர் சி.ஜே. ஜெப மாலை வரவேற்று பேசினார். முன்னாள் பேரூராட்சி பெருந்தலைவர் என்.அசோக்குமார், ஆதனூர் பங்கு தந்தை ஏ.எம்.லூர்துசாமி அடிகளார், ஆதனூர் சேகரம் உதவி குரு டி.சார்லஸ் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆண்டறிக்கையை தலைமையாசிரியை ஜெஸி லிட்டில் ரோஸ் வாசித்தார். மக்கள் சட்ட உரிமைகள் கழக பொதுச் செயலாளர் யு.வசந்த், ஜே.சி.கே மேல்நிலைப் பள்ளித் தாளாளர் முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் இரா.வேம்பையன், வட்டார மருத்துவ அலுவலர் வி.செளந்தர்ராஜன், ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் ஆர்.ஜெயபால் சிறப்புரையாற்றி 9 ஆண்டுகள் தொடர்ந்து 10ஆம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சிக்கு பாடுபட்ட தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்.
தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற அனை வருக்கும் சான்று மற்றும் பரிசு வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியைகள் செ.மெர்ஸிஅருள் கிளாரா, ச.தர்மதுரை, எஸ்.ஜெனிவா மேரி, தா.ஏஞ்சலின்அருள்ஜோதி, டே.சோ பியா ஆகியோர், ஏற்பாடு செய்திருந்தனர். ஆசிரியை அ.செபஸ்டின் சகாயமாலா நன்றி கூறினார்.
அரசுப் பள்ளி
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அடுத்த வீரியங்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை நடை பெற்றது. பேராவூரணி கோகனட் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில், லயன்ஸ் சங்கத்தின் ஸ்தாபகர் டாக்டர் மெல்வின் ஜோன்ஸ் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவிற்கு, சங்க தலைவர் எம். நீலகண்டன் தலைமை வகித்தார். செயலாளர் வி.ஜெய்சங்கர் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் சுரேஷ் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் பரிமளா அய்யப்பன், துணைத் தலைவர் வி. கணேசன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதி, பிரகதீஸ்வரி, வேலு, நீலாவதி, லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பாலசுப்பிரமணி யன், இளங்கோ, கதிரவன், முத்துவேல், கோவிந்தன், பன்னீர்செல்வம், பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு ஓட்டப்பந்தயம், கயிறு தாண்டுதல், இசை நாற்காலி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.