வெள்ளி, பிப்ரவரி 26, 2021

tamilnadu

img

முகக் கவசம் இன்றி ஊர்சுற்றும் கர்நாடக சுகாதார அமைச்சர்....

பெங்களூரு:
ஆட்சி நடத்துபவர்கள் என்ற அடிப்படையில் பொதுமக்களுக்கு கொரோனா விதிகளை உபதேசம் செய்யும்பாஜகவினர் நடைமுறையில் அவர்கள் யாரும், அந்த விதிகளைப் பின்பற்றி நடப்பதில்லை.

இதில் முக்கியமானவர் கர்நாடக மாநிலத்திற்கே சுகாதாரத் துறை அமைச்சராக இருக்கும் ஸ்ரீராமுலு-தான்.கடந்த வாரம், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் மருத்துவ ஊழியர் களுக்கு பாராட்டு என்ற பெயரில் விழா ஒன்றை ஸ்ரீராமுலு நடத்தினார். இதில் பெரும்கூட்டம் கூடியது. அவர்களில் பெரும் பாலானோர் முகக்கவசம் அணியவில்லை. தனிநபர் இடைவெளி காற்றில் பறந் தது. இந்த விவகாரம் அப்போதே சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்நிலையில், முகக்கவசம் அணியாமல் கடைவீதியைச் சுற்றிவந்தும், முகக் கவசம் அணியாமலேயே கடை ஒன்றை ஆய்வு செய்தும் ஸ்ரீராமுலு மீண்டும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார்.ஒடிசாவில் பாஜக-வைச்சேர்ந்த பெண் எம்.பி. அபராஜிதா சாரங்கி, கொரோனா விதிகளை தொடர்ந்து மீறிய காரணத்தால், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதுடன், எப்.ஐ.ஆரும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

;