புவனேஸ்வர்:
ஒடிசாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் அனைவருக்கும் இலவச செல்போன்கள் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். ஒடிசாவின் மல்கங்கிரி மாவட்டத்தில் உள்ள 52 வருவாய் கிராமங்களில் நிறைவேற்றப்பட்டதிட்டங்களை முதல்வர் நவீன்பட்நாயக் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்து பேசுகையில், நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் வாழும் அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக செல்போன் வழங்கப்படும். இந்த பகுதியில் ஏற்கனவே 4 செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 இடங்களில் 4ஜி செல்போன் கோபுரங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.