tamilnadu

img

ஆர்எஸ்எஸ்/பாஜக பாசிச நடவடிக்கைகளிலிருந்து நாட்டைப் பாதுகாத்திடுவோம் : து.ராஜா

புதுதில்லி, ஜன. 18- ஆர்எஸ்எஸ்/பாஜகவின் பாசிச நடவடிக்கை களை முறியடித்து, மாணவர்களைப் பாது காத்திட, நாட்டைப் பாதுகாத்திட, ஜனநாய கத்தைப் பாதுகாத்திட, நாம் அனைவரும் ஒன்று பட்டுப் போராடுவோம், முன்னேறுவோம் என்று து.ராஜா கூறினார். தலைநகர் தில்லியில், ‘பிரஸ் கிளப் ஆப் இந்தியா’ வளாகத்தில் உத்தரப்பிரதேச மாநில அரசாங்கம், மனித உரிமைகளை அப்பட்ட மாக மீறியுள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒரு செய்தி யாளர் கூட்டம் புதனன்று நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  ஏற்பாடு செய்திருந்தது. இதில் பங்கேற்று து.ராஜா பேசியதாவது:

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளவர்களுக்கு இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில், எங்கள் ஒருமைப் பாட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன். அங்கே நடைபெற்றவை அரசே முன்னின்று நடத்திய வன்முறை வெறியாட்டங்களாகும். அரசே மேற்கொண்ட பயங்கரவாதமாகும். அங்கே பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே, தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர்,  பெண்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே இருப்பதைப் பார்க்கிறோம். உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாழும் பழங்குடி யினர் கூட்டம் கூட்டமாகப் படுகொலை செய்யப்படுகின்றனர்.  உன்னோவில் நடைபெற்ற கொடுமைகளை நாம் அனைவரும் அறிவோம். மாநிலம் முழு துமே விளிம்புநிலையில் உள்ள மக்கள்மீதும், அடித்தட்டு மக்கள் மீதும் கொடூரமான முறை யில் தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. தலித்துகள் பந்த் போராட்டம் நடத்திய சமயத்தில், அவர்களின் தலைவர்கள் கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட் டார்கள். இப்போது குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான இயக்கம் நடைபெற்ற அன்று தங்கள் தாக்குதல்களை அதிகப்படுத்தி யுள்ளார்கள்.

அரசியல் நிர்ணய சபையிலேயே...

பிரதமரும், உள்துறை அமைச்சரும் எதிர்க் கட்சிகள் பொய்களைப் பரப்பிக் கொண்டி ருப்பதாகக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பிரதமரும், உள்துறை அமைச்ச ரும்தான் பொய்களைப் பரப்பிக் கொண்டி ருக்கிறார்கள். இவர்களால் மக்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் கூற முடியவில்லை. குடியுரிமை தொடர்பான பிரச்சனை குறித்து, அரசியல் நிர்ணய சபையிலேயே  டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், சர்தார் வல்லபாய் பட்டேல் முதலானவர்களால் ஆழமான முறை யில் விவாதம் நடைபெற்று, குடியுரிமை வழங்கு வதற்கு மதத்தை இணைக்கக்கூடாது என்ற முடிவுக்கு வந்தார்கள். குடியுரிமை வழங்கு வதற்கு மதம் அடிப்படையாக இருக்க முடியாது. ஆனால் இது குறித்து இப்போது பிரத மரும், உள்துறை அமைச்சரும் பொய்களைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அதேபோன்றுதான் அரசமைப்புச்சட்டம் 370ஆவது பிரிவு குறித்தும் விவாதம் நடை பெற்றது. கோபால்சாமி ஐயங்கார், சர்தார் வல்லபாய் பட்டேல், ஜவஹர்லால் நேரு, ஷேக் அப்துல்லா ஆகியோர் இதன் மீது விவாதம் மேற்கொண்டு, 370 ஆவது பிரிவை உரு வாக்கினார்கள். பின்னர் அதனை அரசியல் நிர்ணய சபையிடம் ஒப்படைத்தார்கள். டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அதன் வரைவுக் குழுத் தலைவர் என்ற முறையில் பெற்றுக்கொண்டு அதனை ஏற்றுக்கொண்டார். இது பள்ளிக் கூடத்தில் படிக்கின்ற மாணவர்களுக்குக் கூடத் தெரியும். ஆனால் இது குறித்தும் பிரதமரும், உள்துறை அமைச்சரும் பொய்களைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுதும் மக்கள் கிளர்ச்சி நடவடிக்கை களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாட்டி லுள்ள அனைத்துப் பல்கலைக் கழக மாணவர்களும் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு எதிராகப் போராடுகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தேச விரோதி கள் என்றும், அர்பன் நக்சல்கள் என்றும் ஆட்சி யாளர்கள் முத்திரை குத்துகிறார்கள். நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? இது என்ன ஜனநாயக நாடா? இல்லை, பாசிச நாடா? இவர்களைக் கேள்வி கேட்கும் உயர்கல்வி நிறுவனங்கள் எல்லாம் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றன. எனவேதான் இவர்க ளுக்கு எதிராக, இங்கே நாம் கூடியிருக்கி றோம். இவர்களிடமிருந்து மாணவர்களைப் பாதுகாப்பதற்காக, ஜனநாயகத்தைப் பாது காப்பதற்காக, நாட்டைப் பாதுகாப்பதற்காக இங்கே நாம் கூடியிருக்கிறோம்.

உத்தரப்பிரதேசத்தில் தங்கள் மீது ஏவப்பட்ட தாக்குதல்களை சிலர் இங்கே எடுத்துக் கூறியுள்ளார்கள். இதேபோன்று ஆயிரக்க ணக்கானவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப் பட்டிருக்கிறது.  நாடு மிகவும் கொந்தளிப்பான நிலையில் இருக்கிறது. நாம் மாணவர்களை, இந்த பாசிஸ்ட் வெறியர்களிடமிருந்து பாதுகாத்தாக வேண்டும். குடியுரிமைத் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும். அதற்காகத்தான் நேதாஜி பிறந்த தினம், குடியரசு தினம் மற்றும் மகாத்மா காந்தி தியாக தினம் அனைத்தை யும் அனுசரித்திட அறைகூவல் விடுத்திருக்கி றோம். ஆர்எஸ்எஸ்/பாஜகவின் பாசிச நடவடிக்கைகளை முறியடித்து, மாணவர்க ளைப் பாதுகாத்திட, நாட்டைப் பாதுகாத்திட, ஜனநாயகத்தைப் பாதுகாத்திட, நாம் அனைவரும் ஒன்றுபட்டுப் போராடுவோம், முன்னேறுவோம். இவ்வாறு து. ராஜா பேசினார்.   (ந.நி.)
 

;