கண்ணூர், டிச.29- இந்தியாவில் ஊடக சமூ கத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளதாக ஊடகவியலாளர் என்.ராம் கூறினார். கண்ணூர் பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் இந்திய வரலாற்று காங்கிரசில், அவர் எஸ்.சி மிஸ்ரா நினைவு சொற்பொழிவாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவில் நாற்பது ஆண்டு களுக்கு முன்பு ஊடக சுதந்திரம் பொறாமைப்படும் அளவுக்கு இருந்தது. ஆனால், இன்று ஊடக சுதந்திரம் வறிய நிலைக்கு வந்துள்ளது. அதிகப்படியான வணிகமயமாக்கல் மற்றும் போட்டிகள் ஊடக சுதந்திரத்தை ஒரு மாயையாக ஆக்குகின்றன. ‘கோப்ரா போஸ்ட்’ இணைய ஏட்டின் விசாரணையில் இந்திய ஊடகங் களில் கணிசமான பகுதியினர் ஊழல் நிறைந்தவர்கள் அல்லது ஊழ லுக்கு ஆளாகிறார்கள் என்பது கண்டறியப்பட்டது. சேனல் விவாதங்கள் என்ற பெயரில் அட்டகாசம் நடக்கிறது. நெறியாளர்களும் நிருபர்களும் ஒழுங்கமைக்கப்பட்ட பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டு வரு கின்றனர். இவை பலமடங்கு உச்சத்தில் சமூக ஊடகங்களில் பிரதிபலிப்பது சமகால அரசியலின் பகுதியாகிவிட்டது. ஊடகங்கள் மீது முக்கிய அரசியல் கட்சிகளின் தாக்குதல்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இது பத்திரிகை யாளர்கள் மீது தொடரும் தாக்கு தல்களின் தொடர்ச்சியாகும். ஊடகங்களுக்கு எதிரான அவதூறு வழக்குகள் வேட்டையாடுதலின் வகைப்பட்டதே. ஊடகங்களை பலவீனப் படுத்தும் முக்கிய காரணி நிதி அழுத்தம். சுதந்திரமான, முற்போக் கான ஊடகங்களின் எதிர்காலம் மிகுந்த கவலைக்குரியதாக உள்ளது. டிஜிட்டல்மயமாக்கல், பாரம்பரிய ஊடகங்களின் நிதி நிலையை பலவீனப்படுத்தியுள்ளது. வாசகர்களின் மாறிவரும் சுவைகள் ஊடகத் துறையில் சிக்கலான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன. ஊழல் மற்றும் வகுப்பு வாதத்திற்கு எதிராக செயல்படும் பத்திரிகையாளர்கள் வேட்டையாடி கொலை செய்யப்படுகிறார்கள். இத்தகைய வழக்குகளில் தண்டனை இல்லாதது பத்திரிகையாளர்களின் கொலைகள் அதிகரிக்க வழிவகுத்துள்ளது. இவ்வாறு என்.ராம் கூறினார். இந்திய வரலாற்று காங்கிரசின் பொதுத் தலைவர் பேராசிரியர் அமியா குமார் பக் ஷி தலைமை தாங்கினார். செயலாளர் பேராசிரி யர் மகாலட்சுமி ராமகிருஷ்ணன் வரவேற்றார். பேராசிரியர் இர்பான் ஹபீப் நன்றி கூறினார்.