திங்கள், மார்ச் 1, 2021

tamilnadu

img

தீக்கதிர் முக்கியச் செய்திகள்

கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பட்டதாரி பணியிடத் தேர்வு ( SSC CGL ) முடிவுகள்,  2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பல்திறன் பணியிடத் தேர்வு ( SSC MTS ) முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளின் முடிவுகளை வெளியிடக் கோரி #Speakup ForsscRailwaysStudents என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.  

                                                                          *******************************

பெட்ரோல் லிட்டருக்கு 4 காசுகள் அதிகரித்து, 85.04 ரூபாய்க்கு விற்பனை யாகிறது. டீசல் ஒரு லிட்டர் ரூ.78.86-க்கு விற்பனையாகிறது.

                                                                        *******************************

பொருளாதார மந்தம் காரணமாக ஆண்டு ஜிடிபி 40 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு மைனஸ் 24 சதவீதத்திற்கு சென்றுள்ளது.

                                                                        *******************************

கிருஷ்ணகிரி மாவட்ட தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என, சி.இ.ஓ., முருகன் தெரிவித்துள்ளார்.

                                                                       *******************************

2019 - 2020 ஆம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி தாக்கல் செய்ய கூடுதலாக 2 மாதம் காலஅவகாசத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

                                                                       *******************************

இந்தியா, ரஷ்யா இடையேயான கூட்டு கடற்படைப் பயிற்சி செப்டம்பர் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

                                                                       *******************************

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5,075 கன அடியாக அதிகரித்துள்ளது.

                                                                       *******************************

நாடு முழுவதும் மேலும் பல சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டு உள்ளோம். இதுகுறித்து மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம் என்று  ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;