tamilnadu

img

மத்திய புலனாய்வு அமைப்புகள், பாஜகவின் அரசியல் அங்கமாக செயல்படுகின்றன -சிபிஎம் கண்டனம்

மத்திய அமலாக்கத்துறையும், இதர மத்திய அரசின் புலனாய்வு முகமைகளும் பாஜக அரசின் அரசியல் அங்கங்களாக செயல்படுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் கீழ் இயங்கும் அமலாக்கத்துறையும், மற்றும் இதர புலனாய்வு முகமைகளும், கேரளாவில் மக்களால் ஜனநாயகபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தையும் அதன் முதல்வரையும் குறிவைத்துத் தாக்கிப் பலவீனப்படுத்துவதற்காக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

மத்தியப் புலனாய்வு அமைப்புகள், தங்கக் கடத்தல் வழக்கில் விசாரணை மேற்கொள்கையில், தங்கக் கடத்தலில் பெற்ற பணம் தேச விரோத நடவடிக்கைகளுக்காகப்பயன்படுத்தப்பட்டதாக, சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச்சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கையில், அதைச் செய்வதற்குப் பதிலாக, அதில் கேரள ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் அரசியல் தலைமைமையயும் பிணைத்திட பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.  

இவ்வழக்கு தொடர்பாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு, காவல் அடைப்பில் இருக்கின்ற இருவர், அவர்கள் இருவரும் ஆளும் அரசியல் தலைவர்களின் பெயர்களை வழக்குடன் பிணைத்துக் கூறினால், அவர்களைக் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்து, அப்ரூவர்களாக்கி விடுகிறோம் என்று நிர்ப்பந்தம் அளித்து வருவதாகத் தெரிவித்திருக்கின்றனர். ஒரு பெண்மனி பேசுகிற ஆடியோ பதிவும், இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரியின் பிணை விண்ணப்பமும் இதனைக் கூறியிருக்கின்றன.

இது, முற்றிலும் அட்டூழியமானதும் ஏற்க முடியாததுமாகும். பாஜக அரசாங்கம் மத்திய புலனாய்வு முகமைகளை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளை அரித்துவீழ்த்தக் கூடிய விதத்தில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது, இத்தகைசய அரசமைப்புச்சட்ட விரோத நடவடிக்கைகள் மூலமாக தங்கள் அரசியல் நலன்களை முன்னெடுத்துச்செல்ல துஷ்பிரயோகம் செய்துகொண்டிருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு, இத்தகைய நடவடிக்கைகளை எதிர்க்கிறது. நீதித்துறையும் இதர சுயேச்சையான நிறுவனங்களும் அரசமைப்புச்சட்டத்தை உயர்த்திப்பிடித்திட வேண்டும் என்று அறைகூவி அழைக்கிறது. இத்தகைய பாஜக அரசின் இழிமுயற்சிகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழ வேண்டும் என்று மக்களை அறைகூவி அழைக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு, கேரள மக்கள் இவ்வாறு இழிமுயற்சிகளை மேற்கொண்டுள்ள பாஜகவிற்கும் அதனுடன் ஒத்து ஊதும் ஐமுகூ-விற்கும் தக்க முறையில் பதில் கூறுவார்கள் என்று நம்புகிறது.  
இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.

(ந-நி.

;