tamilnadu

img

ராகுல் வீட்டு முன்பு தமிழ்நாடு காங்கிரசார் போராட்டம்

புதுதில்லி:
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பதவி விலகும் முடிவை கைவிடவும், தலைவராக தொடரவும் வலியுறுத்தி அவரது வீட்டு முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல்காந்தி தலைவர் பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்த நிலையில், காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் அவரது முடிவு ஒரு மனதாக நிராகரிக்கப்பட்டது. எனினும் அவர் தனது முடிவில் பிடிவாதமாக உள்ள நிலையில் கட்சியின் பல்வேறு தரப்பினரும் அவர் தலைவராகத் தொடர கோரிக்கை விடுத்து வருகின்றனர். திங்களன்று தில்லியில் உள்ள அவரது வீட்டின் முன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினர் பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.