election2021

img

அதிமுகவின் முககவசத்தை அகற்றினால் ஆர்.எஸ்.எஸ் பாஜகவின் முகமே தெரியும்... சேலத்தில் ராகுல்காந்தி பேச்சு....

சேலம்:
தற்போது இருப்பது பழைய அதிமுக இல்லை. அது முடிந்து விட்டது. தற்போது இருக்கும் அதிமுகவின் முககவசத்தை அகற்றினால் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் முகமே தெரியும்.முகமூடிக்குள் மறைந்திருக்கும் பாஜக - ஆர்எஸ்எஸ் அணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்று சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி பேசினார். 

அவர் மேலும் பேசியதாவது, தமிழ் கலாச்சாரம், தமிழ் மொழி, தமிழ் வரலாற்றின் மீது முழுமையான தாக்குதலை சந் தித்து வருகிறோம். ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழகத்தில் உள்ளது. தமிழகத்தின் நிலைப்பாடு இந்தியா முழுவதற்குமானது. எந்த ஒரு உறவும் சமநிலையிலே இருக்கவேண்டும். அன்பும்மரியாதையும் ஒருவருக்கு ஒருவர் செலுத்த வேண்டும்.இந்தியா என்பது பல்வேறு மாநிலங்களின் ஒருங்கிணைப்பு. மொழி, கலாச்சாரம், பண் பாடுகள், மதங்களின் ஒருங்கிணைப்பாக இந்தியா உள்ளது. எந்த ஒரு சிந்தனையும், ஒன்றைவிட மற்றொன்று பெரியது என்று சொல்லிவிட முடியாது. நாட்டிற்கு நாம் அனைவரும் அனைத்து மொழியும், அனைத்து கலாசாரமும் சமமானது. தமிழ் மொழியின் மீதான தாக்குதல் மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியா மீதானதாக்குதலாக உள்ளது. தமிழர்களை மதிக்காமல்இந்தியா இருந்து விட முடியாது. மேற்கு வங்காளத்தை மதிக்காமல் இருக்க முடியாது.

ஒற்றைச் சிந்தனைக்கு இந்தியாவை தள்ளமுடியாது. அனைத்து மொழிகளும், கலாச்சாரங்களும், சித்தாந்தங்களும் இந்தியாவை உருவாக்கி உள்ளன. ஒற்றைச் சிந்தனையை ஒத்துக்கொள்ள முடியாது. அதிமுக முகக் கவசத்திற்குள்ஆர்எஸ்எஸ் பாஜக. நாங்கள் அனைவரும் `தமிழ்’ என்ற சிந்தனையையும் ஆதரிக்கும் நேரத்தில்இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து சிந்தனையையும் ஆதரிக்கிறோம். வீரமணி அவர்கள் சொன்னது போல, முகக்கவசம் அணிவது கொரோனாவிற்கு எதிராக மிகவும் பாதுகாப்பானது. முகக்கவசம் அணிவதை எங்குப் பார்த்தாலும் பார்க்கிறோம். முகக்கவசத்திற்கு பின்னே சிலதை மறைத்து கொள்கிறோம். ஒருவரைப் பார்த்து சிரிப்பது கூட தெரியாதநிலை உள்ளது. இது பழைய அ.தி.மு.க என்றுநம்பி யாரும் ஏமாந்து விடக்கூடாது. தற்போதுஅதிமுக போன்ற தோற்றத்தில் முகக்கவசம் அணிந்து கொண்டுள்ளது. அந்த முகக்கவசத்தின்பின்னே ஆர்எஸ்எஸ், பிஜேபி ஒளிந்து கொண்டுள்ளது.ஒருதமிழர் கூட மோடி, அமித்ஷா ஆகியோரின் முன்பு தலைகுனிந்து நிற்கவிரும்பவில்லை. மோடி, அமித்ஷா, மோகன் பகவத் பேச்சைக் கேட்க விரும்பவில்லை.

ஆனால், ஏன் இந்தமுதலமைச்சர் அவர்களின் காலில் விழுகிறார். ஒரு தமிழரும் காலில் விழும் கலாசாரத்தை விரும்பவில்லை. இது நம்முடைய கலாச்சாரத்திற்கு எதிரானது. தமிழக முதலமைச்சர் பிரதமர் மோடியின் முன்பு தலை குனிந்து, வணங்கிநிற்கிறார். ஏன் என்றால், மத்திய அரசின் புலனாய்வுதுறை, பொருளாதார குற்றத்துறை கையில் இருப்பதால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளதலைகுனிந்து நிற்கிறார். அவருக்கு வேறு எந்தவாய்ப்பும் இல்லை.முதலமைச்சர் தலைகுனிந்து நிற்பதற்கான விலையை கொடுக்கப்போகிறார். ஒவ்வொரு முறையும் அவர் தலைகுனிந்து நிற்கும்போது, அதற்கான விலையை அவர் கொடுக்கவில்லை. தமிழர்கள் மிகப்பெரிய விலையை இதற்காக கொடுக்கிறார்கள். தமிழ்மொழி, கலாசாரம் மற்றும் விருப்பமான பண்பாடு, பழக்க வழக்கங்களை விலையாக கொடுத்து வருகிறார்கள். தமிழ்ப் பண்பாட்டினையும், மொழியை காப்பாற்றும் பொறுப்பில் இருப்பவர் கவலைப்பட
வில்லை.

நாட்டின் உற்பத்தித் தலைநகராக தமிழ்நாடுஇருக்கிறது. சிறு குறு தொழிற்சாலைகள் மூலம்நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் பொருட்களை அனுப்புகிறது. நோயாளி மருத்துவமனைக்குச் செல்வதற்கான ஆம்புலன்ஸ்களை தமிழகம் தயாரிக்கிறது. பண மதிப்பிழப்பும், ஜி.எஸ்.டி வரியும் இரட்டைத் தாக்குதலாக தொழில் துறையினருக்கு அமைத்துவிட்டது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து பரிதவிக்கும் நிலையில், இதைப்பற்றி முதலமைச்சர் கேள்வி கேட்கவில்லை. மூன்று வேளாண்மைச் சட்டங்களுக்கு எதிராகவும் முதலமைச்சர் கேள்வி கேட்கவில்லை.தமிழக விவசாயிகளுக்காகவும், கேட்கவில்லை. இந்திய விவசாயிகளுக்காகவும் கேட்கவில்லை. திட்டமிட்டு தமிழர்களின் வாழ்வியலை குலைக்கும் கல்விக் கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளது. நீட் தேர்விற்கு எதுவும் குரல்எழுப்பவில்லை. மத்திய அரசு எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற வெற்றுக் காசோலையை முதலமைச்சர் வழங்கிவிட்டார். நாட்டைபிளவுபடுத்தும் மத்திய அரசின் செயலை தட்டிக்
கேட்பதில்லை.

மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக்க மக்கள் முடிவெடுத்து விட்டார்கள். அந்த முடிவைஒப்புக் கொள்கிற விதமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தப் போர் இத்துடன் முடிவதில்லை. ஆர்எஸ்எஸ் - பிஜேபியும் தமிழ்நாட்டில் நுழைய முடியாமல் தடுத்து விட்டால் மீண்டும் நுழைய மாட்டார்கள் என்பதுகிடையாது. மீண்டும் மீண்டும் முயற்சிப்பார்கள். பணம் சம்பாதிப்பதற்காக! முதலில் தமிழ்நாட்டில் இருந்து துரத்திவிட்டு, டெல்லியில் இருந்தும் அகற்றவேண்டும். ஒவ்வொரு மாநிலமும் இதுபோன்ற பாதிப்பில் அகப்பட்டுத்தவிக்கிறது. ஜனநாயகம் அழிக்கப்பட்டுவருகிறது. அமைப்புகள் அழிக்கப்படுகிறது. தங்களுடைய நண்பர்களுக்கு உதவிசெய்வதற்காக இதைப் போல செய்கிறார்கள். சிலருக்கு பணம் சேர்வதற்காக, நம்முடையபண்பாட்டினை விலைபேசும் நிலை ஏற்பட் டுள்ளது. இந்த இரண்டு போராட்டங்களிலும் அவர்கள் நிச்சயம் வெல்லமுடியாது.இவ்வாறு அவர் பேசினார்.