தோழர் அப்துல் வஹாப் மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சியும் ஆழ்ந்த துயரமும் அடைந்துள்ளேன். நானும் அப்துல் வஹாப்பும் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் விடுதலைப் போராட்டக் காலக்கட்டத்தில் மாணவர்களை அணிதிரட்டி மாணவர் சங்கத்தையும் கம்யூனிஸ்ட் கட்சியையும் உருவாக்கிய அந்த நினைவுகள் எனது நெஞ்சில் நிழலாடுகின்றன. தோழர் வஹாப் ஒரு மகத்தான கம்யூனிஸ்ட். அவரை இழந்து வாடும் அவரது மகன் யாக்கோபுக்கும், மகள்களுக்கும், தோழர்களுக்கும் எனது இதயப்பூர்வமான ஆறுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்.சங்கரய்யா, முதுபெரும் தலைவர், சிபிஐ(எம்)
தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், தோழர்களால் ‘அத்தா’ என்று அன்போடு அழைக்கப்படுவருமான தோழர் ஏ.அப்துல் வஹாப் (வயது 96) அவர்கள் செவ்வாயன்று (14.01.2020) அதிகாலை 3.30 மணியளவில் காலமானார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். தேனி மாவட்டம், கம்பம் நகரில், ஆக்கூர் மீரா லெப்பை சாயபு - பாத்திமா தம்பதியரின் கடைசி மகனாக 1925 பிப்ரவரி 1அன்று பிறந்தவர் அப்துல் வஹாப். அவரது பள்ளிப் படிப்பு காலம், இந்திய சுதந்திரப் போராட்டம் முழு வீச்சில் இருந்த காலகட்டமாகும். உத்தம பாளையத்திலும், பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் அவர் பயின்றபோது, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவரான அன்றைய மாணவர் தலைவர் என். சங்கரய்யாவுடன் இணைந்து மாணவர் சங்கத்தை உருவாக்கி வளர்ப்பதில் தீவிரமாக செயல்பட்டவர் அப்துல் வஹாப். அமெரிக்கன் கல்லூரியில் கம்யூனி ஸ்ட் கட்சி கிளையையும் உருவாக்கி செயல்பட்டதில் முன்னின்றார்.
கல்லூரிப் படிப்புக்கு பிறகு சில ஆண்டுகளில் சென்னை சென்று ஜனசக்தி அலுவலகத்தில் பணியாற்றினார். பின்னர் 1948ல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட நிலையில், கட்சித் தலைமையின் முடிவுப்படி பொன்மலை ரயில்வே சங்கத்தில் பணியாற்றினார். காவல்துறையினர் தீவிரமாக தேடிய போதிலும் பல மாதங்கள் தலைமறைவாக இருந்து பணியாற்றினார். பின்னர் தஞ்சாவூரிலும், அதன்பின்னர் சென்னையில் தோழர் ஏ.பாலசுப்பிரமணியம் அவர்களுடனும் இணைந்து செயலாற்றிய அவர், 1951ல் கட்சி மீதான தடை நீக்கப்பட்ட பின்னர், தற்போது இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவிகுளம், பீர்மேடு பகுதிகளில் தோட்டத் தொழிலாளர்களிடையே கட்சிப் பணியாற்றுமாறு தலைமை பணித்ததை ஏற்றுக் கொண்டு அங்கு சென்று தோட்டத் தொழிலாளர்களை அணிதிரட்டி பல்வேறு போராட்டங்களை நடத்தினார். பின்னர் ஒன்றுபட்ட மதுரை மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் பெரியகுளம் வட்டச் செயலாளராக, மதுரை மாவட்ட செயற்குழு உறுப்பினராக, தமிழ்நாடு மாகாண கவுன்சில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றினார்.
1964ல் கும்பகோணத்தில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு கவுன்சில் கூட்டத்தில் 31 தலைவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினர். அவர்களில் ஒருவர் தோழர் அப்துல் வஹாப்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதய மானவுடன் 1964 இறுதியில் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 16 மாத காலம் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலையான பின்னர் கட்சியின் கேரள மாநிலக்குழு வேண்டுகோளுக்கிணங்க 1970களில் கோட்டயம் மாவட்டத்தில் கட்சிப் பணி யாற்றி திரும்பினார். 1975ல் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அவர், அப்போது முதல் தீக்கதிர் நாளேட்டின் பொது மேலா ளராக பொறுப்பேற்று 2001 வரை அப்பொறுப்பை நிறைவேற்றி, தீக்கதிர் நாளேட்டை தங்கு தடையின்றி வெளி வரச் செய்யும் மகத்தான பணியாற்றி னார். தீக்கதிர் நாளேட்டின் வளர்ச்சி க்கு அடித்தளமிட்டவர்களில் முதன்மை யானவர் தோழர் ஏ.அப்துல் வஹாப் என்றால் மிகையல்ல. வாரப் பத்திரி கையாக இருந்த தீக்கதிரை தினசரி இத ழாக கொண்டு வருவதில் அவரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக பல்லா ண்டு காலம் செயலாற்றிய அவர், 2001க்கு பிறகு மதுரை புறநகர், தேனி மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் பணி யாற்றினார். பின்னர் உடல்நலக்குறைவு காரண மாக கம்பம் நகரில் உள்ள தமது இல்லத்தில் வசித்து வந்தார். அவரது கடைசிக் கால கட்டத்தில் கூட தீக்க திர் பத்திரிகையும், அது மேலும் மேலும் வளர வேண்டும் என்ற எண்ணமும் அவ ரது நினைவுகளில் இருந்து அகல வில்லை.
தமிழகத்தில் மார்க்சிய இயக்கத்தின் வளர்ச்சிக்கு மகத்தான பங்காற்றிய தோழர் ஏ.அப்துல் வஹாப் அவர்களின் மறைவு கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது. அவரது மறைவால் வாடும் அவரது மகன் முகமது யாக்கோப் மற்றும் மகள்கள் சையது அலி பாத்திமா, வஹீதா பேகம், ஜெயிலா பேகம் உள்ளிட்ட உற வினர்களுக்கும், கட்சியின் தேனி மாவ ட்டக்குழு தோழர்களுக்கும் மாநில செயற்குழு இதயப்பூர்வமான ஆறு தல்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்)