tamilnadu

img

மீண்டும் சோதிக்கப்படும் இந்திய ஜனநாயகம்... பிரணாப் முகர்ஜி பேச்சு

புதுதில்லி:
இந்திய ஜனநாயகம் மீண்டும் சோதிக்கப்படுகிறது என இந்திய குடியரசின் முன்னாள்தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.மத்திய பாஜக அரசு, சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி போன்ற சட்டங்களைக் கொண்டுவந்து, இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியலமைப்பை கேள்விக்கு உள்ளாக்கியிருக் கும் நிலையில், தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பிரணாப் முகர்ஜி இவ்வாறு கூறியுள்ளார்.“நாட்டில் நடக்கும் அமைதியான போராட்டங்கள் ஜனநாயகத்துக்கு புத்துயிர் அளிக்கும். ஒருமித்த கருத்தே ஜனநாயகத்தின் உயிர்நாடி. கேட்பது, விவாதிப்பது, வாதிடுவது மற்றும் கருத்து வேறுபாடு கூட ஜனநாயகம்தான். இந்திய ஜனநாயகம் மீண்டும் சோதிக்கப்படுகிறது. கடந்தசில மாதங்களாக மக்கள் வீதிகளில் அதிக எண்ணிக்கையில் குறிப்பாக இளைஞர்கள் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில் தங்களது கருத்துக்களை கூறுவதை காண்கிறோம். அரசியலமைப்பின் மீதான இளைஞர்களின் உறுதியான நம்பிக்கையை பார்ப்பது மனத்தைக் கவருவதாக உள்ளது. இவ்வாறு பிரணாப் முகர்ஜி பேசியுள்ளார்.