tamilnadu

img

காந்தி கிராம பல்கலை.யை ஒப்புயர்வு கல்வி மையமாக்குக!

சென்னை, ஜன. 6- மகாத்மா காந்தியடிகளின் நினைவைப் போற்றிட, அவரின் 150வது பிறந்த நாளினை இந்த ஆண்டு நாம் கொண்டாடி வரு கின்றோம்.  ஆங்கிலேயர் ஆட்சியினால் இந்தியாவில் ஏற்படுத்தப்பட்ட மோசமான வறுமை நிலையை இந்த உலகத்திற்கு உறுதிபட எடுத்துக் காட்டுவதற்கு, மகாத்மா காந்தி அரையாடையுடன் மேல்  துண்டை மட்டுமே அணியும் வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவினை, மது ரையில் 1921ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 22ஆம் தேதி எடுத்தார். இந்த நிகழ்வினை நினைவூட்டும் வகையில், மதுரைக்கு அருகி லுள்ள காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தினை மேம்ப டுத்தி, அதனை ஊரக வளர்ச்சி மற்றும் காந்திய மெய்யியலுக்கான ஒப்புயர்வு கல்வி மையமாக உருவாக்க மத்திய அரசை  வலி யுறுத்தி கேட்டுக்கொள்வதாக தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;