வியாழன், மார்ச் 4, 2021

tamilnadu

img

பரூக் அப்துல்லா எப்போது வெளியே வருவார்? மக்களவையில் முலாயம் சிங் கேள்வி-சபாநாயகர் அலட்சியம்

புதுதில்லி:
காஷ்மீரில் வீட்டுக்காவலில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பரூக் அப்துல்லா எப்போது வெளியே வருவார் என்று நாடாளுமன்றத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கேள்வி எழுப்பினார். ஆனால் மக்களவை சபாநாயகர் இந்த கேள்விக்கு பதில் சொல்ல வலியுறுத்தாமல் அலட்சியப்படுத்தினார்.

மத்திய பாஜக அரசு, ஜம்மு-காஷ்மீருக்கான  சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அந்த மாநிலத்தை இரண்டாக பிரித்து சிதைத்தது. முன்னாள் முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களை வீட்டுக்காவலில் வைத்தது. இதில் முன்னாள் முதல்வரும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான பரூக் அப்துல்லா 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில் மக்களவையில் செவ்வாயன்று கேள்வி நேரத்தின் போது சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், பரூக் அப்துல்லா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பினார். வழக்கமாக பரூக் அப்துல்லா எனது அருகே அமருவார். அவர் எப்போது மக்களவைக்கு வருவார் என்று கேட்டார்.ஆனால், இந்த கேள்விக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தாமல், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அலட்சியப்படுத்தி,அடுத்த கேள்விக்குச் சென்றுவிட்டார்.

;