ஜனவரி 8 ஆம் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி பிரதேசக்குழு சார்பில் மறைமலை அடிகள் சாலையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. நகரக மிட்டி செயலாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். பிரதேசச் செயலாளர்ஆர்.ராஜாங்கம், மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள், இடைக்குழு செயலாளர்கள் தமிழ்ச்செல்வன், நடராஜன், அன்புமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கேரளா அரசு சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டுவந்துள்ளதைப் போல், புதுச்சேரி சட்டப் பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என தலைவர்கள் வலியுறுத்தி பேசினர்.