tamilnadu

தமிழகத்தில் நீட் ரத்தாகும் : காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

புதுதில்லி, ஏப். 2-


நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை அதன் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டு அதில் உள்ள அம்சங்கள் குறித்து பேசினார்.“5 முக்கிய அம்சங்களை கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. நியாய் எனப்படும் குறைந்தபட்ச வருவாய் திட்டம் மூலம் வழங்கும் வகையில்ஏழைகளுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கப் படும். இந்த திட்டத்தின்மூலம் நாட்டில் உள்ள 20 சதவீத ஏழைக் குடும்பங்கள் பயனடையும். பண மதிப்பிழப்பு பாதிப்புகளை சரிசெய்யும் வகையில் நியாய் திட்டம் இருக்கும். புதிய தொழில் தொடங்க 3 ஆண்டுகளுக்கு எந்த அனுமதியும் தேவையில்லை. கிராம ஊராட்சிகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். 2030ம் ஆண்டுக்குள் வறுமை முற்றிலுமாக ஒழிக்கப்படும். விவசாய கடன்களை திருப்பி செலுத்தாவிட்டால் அது கிரிமினல் குற்றமாக கருதப்படாது. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில், வேலை நாட்கள் 150 நாட்களாக உயர்த்தப்படும். விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். நீட் தேர்வை எதிர்க்கும்தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அந்தமுறை ரத்து செய்யப்படும். அதற்கு பதிலாக மாநில அளவில் தேர்வு நடத்தப்படும்’’ என்றார். 

;