tamilnadu

img

சிபிஎம்-யிடம் ஆதரவு திரட்டிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகத்தில், அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனை மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டினார். 
ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா சமீபத்தில் காலமானார். இவர் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகன் ஆவார்.  இந்த தொகுதிக்கு பிப்ரவரி 27 அன்று இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில்  காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஒப்புதலுடன் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்  தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகத்தில், அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனை மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டினார்.