tamilnadu

img

புதுச்சேரியில் 5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு இல்லை

புதுச்சேரியில் 5,8 ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை என்ற அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 
புதுச்சேரியில் 5 மற்றும் 8 -ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை என்று மாநில கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செவ்வாயன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: புதுச்சேரியில் 5 மற்றும் 8 -ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் திட்டம் இல்லை. பழைய முறையிலேயே மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும்.  ஆனால் மாணவர்கள் தேர்வு எழுதும் பள்ளிகளில் அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட மாட்டார்கள். வேறு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் அந்தப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றார்.
 

;