வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக பரப்புரை செய்துவந்த பாஜகவினரை கிராம மக்கள் விரடியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம், திருபுவனை தொகுதிக்கு உள்பட்ட கிராமம் பெரிய பேட் பகுதி. இந்தப் பகுதியில் மத்திய அரசால் அண்மையில் கொண்டுவரப்பட்ட புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக பொதுமக்களிடையே பாஜகவினர் பரப்புரை செய்துவந்தனர்.இதனை அறிந்த அப்பகுதி கிராம மக்கள் திடீரென ஆவேசமடைந்து, வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்டிருந்த பாஜவினரை துரத்தியடித்தனர். இச்சம்பவத்தின் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
புதுச்சேரி மாநில பாஜகவினர் கனகசெட்டிக்குளம், ஈசிஆர் பகுதிகளில் தங்களது தேர்தல் பரப்புரையை தொடங்கினர். அவ்வாறு பரப்புரை தொடங்கிய முதல் நாளிலேயே, பாஜகவிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டினர்.